முதலில் சொத்தை கைப்பற்றி அடுத்து கட்சியை வலுப்படுத்தும் பகீர் ப்ளான் போட்டு அதிமுகவில் ஐக்கியமாக திட்டமிட்டுள்ளாராம்  
ஜெயலலிதாவின் ரத்த வாரிசான அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா.  

சேலம் மாநகரில் தீபா பேரவை பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவில் இணையப் போவதாக அறிவித்தார் தீபா. அங்கு ஜெயலலிதாவுக்கு போடும் தங்க தாரகையே வருக வருக.. என பாடலை போட்டு அதிர வைத்திருக்கிறார்கள் நிர்வாகிகள். ‘ஜெ.தீபா என்னும் நான்...’ என விரைவில் கோட்டையில் சத்தம் கேட்கும் என்று ஒரு நிர்வாகி அதிரடியாக பேச, தலைவி தனது முகத்தை பேப்பரால் மூடிக்கொண்டு குலுங்கி குலுங்கி சிரித்தாராம். ஒவ்வொரு புகழ்ச்சியையும் ரசித்து கொண்டிந்த தீபாவுக்கு, அனைவரும் ஒரே வேண்டுகோளாக மாதவனை கூடவே வைத்துக்கொள்ளுங்கள் என கூறினார்களாம். இறுதியில் அதிமுகவுடன் இணைய முடிவு செய்திருக்கோம் என தீபா பேட்டி கொடுக்கவும், கட்சியினர் மீண்டும் அவங்ககிட்ட போணுமா’ என புலம்பி இருக்கிறார்கள்.

’’தமிழக அரசியல் களமே களேபரமாக கிடக்கிறது. இதுல நாம ஜெயிப்பது என்பது குதிரைக்கு கொம்பு முளைத்தது போலதான்... அதனால அரசியல் ஆர்வக்கோளாறில் இருப்பதை விட்டுவிடக்கூடாது’’ என்கிற  முடிவில் இருக்கிறராம் தீபா. அதாவது அத்தையின் சொத்து, பணம் விவகாரங்கள் அனைத்தும் ஆளுங்கட்சியின் அசைவில் இருப்பதால், அரசியலில் குதித்தால் சொத்து போய்விடும். தொண்டர்களை நம்பி நாம் களம் இறங்கினால் கிடைக்க வேண்டிய சொத்தும் உடனடியாக கிடைக்காது. வழக்கு மேலே வழக்கு போட்டு கிடைப்பதில் தாமதம் ஆகும். ஆகையால் அனுசரித்து போய் முதலில் சொத்தை வாங்குவோம்.

அதை வைத்து கட்சியை  ஆரம்பிப்பதா? இல்லை பெரிய தொகையோடு செட்டிலாகிடலாமா? என பலமாக யோசித்தாராம் தீபா. ஒரு முடிவுக்கு வந்த அவர் முதலில் பணம், அது வந்த பிறகு மீண்டும் கட்சி என்ற முடிவுக்கு வந்ததால்தான் அதிமுகவுடன் இந்த இணைப்பாம். சசிகலா சிறையில் இருந்து வெளியில் வந்தால் சொத்தில் இன்னும் பிரச்னை வரும் என நினைக்கிறாராம் தீபா.