அந்த புகாரில்; மறு பதிவு

உதவி ஆணையர்
காவல் துறை,
மாம்பலம் காவல் நிலையம்,

மதிற்புகுறிய ஐய்யா,

உயிருக்கு பயந்து வாழ்வதை விட ஒரு துளி விஷம் அருந்தி மடிவது மேல்...

உண்ட வீட்டுக்கு துரோகம் செய்ய சொல்லுபவர்கள் எப்படி தான் வீட்டை கவனிப்பார்கள்.

என் பெயர் கோவிந்தன் நல்லான் சக்ரவர்த்தி, நான் எம் ஜி ஆர் அம்மா தீபா பேரவையில் தகவல் தொழில் நுட்ப பிரிவில் மற்றும் அலுவுலகத்தில் பணி புரிகிறேன், என்னை தலைமை நிலைய செயலாளர் திரு AV Raja கண்ணமபேட்டையை சேர்ந்தவர் என்னை மிரட்டியும் என் குடும்பத்தை பற்றி மகா கேவலமான வார்த்தைகளால் பிரியோகபடுதியோடு இல்லாமல் என்னை கொலை செய்யவும் திட்டம் தீட்டி இருக்கிறார்கள், 

15 நாட்களுக்கு முன்னால் திரு ராஜா அவர்களின் தூண்டுதலின் பெயரில் திரு சீனுவாசன் photographer அவர்கள் குடி போதை யில் என்னை அடிக்க வந்து தான் வைத்து இருக்கும் மோட்டார் வாகனம் என் மீது ஏற்ற பார்த்தார் அதற்குள் கழக security வந்து தடுத்து விட்டார்.(இதற்கு சாட்சி பிரவீன் முருகானந்தம் அருன்) இதற்கு காரணம் நான் எம் ஜி ஆர் அம்மா தீபா பேரவை மற்றும் அ இ அ தி மு க (ஜெ.தீபா)அணி பொது செயலாளர் திருமதி.J.DEEPA உண்மையான விசுவாசி, அவர்களுக்காக நான் 24 மணி நேரமும் உழைதவன் என்ற பெருமை எனக்கு உண்டு. 

சில மாதங்களாக நான் திரு ராஜா அவர்கள் சொல்லுவதை கேட்கவில்லை, காரணம் தலைமை சொல்படி கேட்டு தான் பணி செய்வேன் என்று அவருக்கும் தெரியும், ஆனால் திரு ராஜா அவர்கள் என்னை திரு மாதவன் அவர்களை பற்றி தவறாக பதிவு போட சொன்னார்கள் நான் அதை மறுத்தேன், அதே போல் திரு மாதவனை பற்றி தப்பு தப்பாக பொய் பிரச்சாரம் செய்ய சொன்னார், சமூக வலைத்தளங்களில் திரு மாதவன் பற்றி பதிவிட மற்றும் அவர் ஒரு திருடன் இதை எடுத்துகொண்டு சென்றுவிட்டார் அதை எடுத்துகொண்டு சென்று விட்டார் என்று, மற்றும் இந்த குடும்பத்தை பிரித்து வைத்து வேடிக்கை பார்த்து ரசித்து கொண்டு இருக்கிறார்.

பொது செயலாளர் அவர்களை சரி வர தொண்டர்களை பார்கவிடாமல் இடையூறு செய்து வருகிறார்,பலரிடம் பணம் பெற்று கொண்டு பொறுப்புகள் வாங்கி தருகிறேன் என்று வாக்குறுதி தந்து இருக்கிறார்கள்.

மாவட்ட பொறுப்பாளர்களிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வருகிறார், நாங்கள் நல உதவி திட்டம் வழங்குவதற்காக பல மாவட்டங்களுக்கு சென்று இருதோம், திரு ராஜா ks பிரகாஷ் வழக்கறிஞர் சாமி சின்ன பிள்ளை இவர்கள் மூன்று பேரும் அங்கு 24 மணி நேரமும் குடி போதையில் இருந்து எங்கள் இளைய புரட்சி தலைவி அவர்களுக்கு அவபெயர் பெற்று தந்தவர்கள்.

கொஞ்சம் நாட்களாக எனக்கும் திரு ராஜா விற்கும் சிறு சிறு மனஸ்தாபங்கள் வருவதுண்டு அதை பெரிது படுத்தாமல் திருமதி J.DEEPA மேடம் அவர்கள் சொல்படி நான் பணியற்றிவந்தேன், இதை கண்டு தாக்குபிடிக்க முடியாமல் என்னை பணியில் இருந்து துரத்த வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு என்னை 3 மாதங்களாக நிம்மதியாக பணி ஆற்ற விடாமல் தினமும் எதோ ஒரு விதத்தில் என்னை தொந்தரவு செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார், நானும் இன்று சரி ஆகிவிடும் நாளை சரி ஆகிவிடும் என்று இருந்தேன் ஆனால் முடிவு என்னை மிகுந்த மனஉளைச்சலுக்கு தள்ளிவிட்டது தான் மிச்சம், இன்று திரு ராஜா அவர்கள் Ks பிரகாஷ் சைதை அவர்களை தலைமை அலுவலக த்திற்கு வரவைத்து என் குடும்பத்தை பற்றியும் எனது பெற்றோர்கள் பற்றியும் தரக்குறைவாக பேசி.

என்னை மேலும் மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டார்கள், இந்த வேதனை தாங்கமுடியாமல் நான் என்ன முடிவு எடுக்க போகிறேன் என்று என்க்கே தெரியவில்லை, இவர்கள் மீது நடவடிக்கை மிக விரவில் எடுக்க வேண்டும் என்று மிக தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் அப்புடி இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் என்னுடைய விளைவுகள் மிக மோசமாக இருக்கும்.

இளைய புரட்சி தலைவி அவர்களை சந்திக்க வரும் அவரது சொந்தங்கள் நண்பர்கள் யாரையும் வீட்டிற்கு செல்வதற்கு தடையாக இருப்பது, வீட்டில் வேலை செய்யும் ஆட்களை வேலை செய்யாமல் துரத்துவது இன்னும் பல வேலைகள்...

பின் குறிப்பு:

அன்று புரட்சி தலைவிக்கு J.ஜெயலலிதா அவர்களுக்கு கொலைக் காரி சசிகலாவை குடும்பம் போல் இன்று இளைய புரட்சி தலைவி J.DEEPA அவர்களுக்கு இந்த பண பித்து பிடித்த திரு ராஜா ks பிரகாஷ் கரூர் பாஸ்கர் சாமி சின்னப்பிள்ளை அவர்கள் தான்.
இவர்களால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.


தேதி : 14.09.2018
நேரம்: 04.16

நேற்று நடந்த சம்பவத்திற்கு சாட்சி ராஜா முன்னிலையில் (முருகானந்தம் om மோகன்) 

Copy to : தலைமை அலுவலகம்
சமூக ஊடகங்கள்

FACEBOOK,WHATSAPP,TWEETER,INSTAGRAM,YOUTUBE,GOOGLE+, மற்றும் அனைத்து ஊடக நண்பர்கள்.

எனக்கும் என்னை சார்ந்த குடும்பத்திற்கும் எதாவது நேர்ந்தால் இதற்கு திரு ராஜா தான் முழு காரணம் என்பதை மிக தெளிவாக விளக்கி உள்ளேன். இன்று தான் கடைசி நாள் என இவ்வாறு அதில் கூறியுள்ளார்.