Asianet News TamilAsianet News Tamil

ஓமைக்ரான் முடிவுகள் வெளிவர காலதாமதம் ஆகிறது.. மத்திய அரசை டார் டாராக கிழித்த மா.சு

மத்திய அரசின் சார்பில் அனுப்பப்படும் ஓமைக்ரான் முடிவுகள் வெளிவர காலதாமதம் ஆகிறது என்றும் நோய் தொற்று காலத்தில் மாநில அரசின் கோரிக்கைக்கு மத்திய அரசு விரைந்து பதிலளிக்க வேண்டும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார்.

It is too late for the Omicron results to come out. Health Minister Ma.Su Criticized central Government.
Author
Chennai, First Published Dec 27, 2021, 12:13 PM IST

மத்திய அரசின் சார்பில் அனுப்பப்படும் ஓமைக்ரான் முடிவுகள் வெளிவர காலதாமதம் ஆகிறது என்றும் நோய் தொற்று காலத்தில் மாநில அரசின் கோரிக்கைக்கு மத்திய அரசு விரைந்து பதிலளிக்க வேண்டும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார். சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனையில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவில் "தரவு அலகு" Data cell  துவக்கி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 

கொரொனாவின் முதல் மற்றும் இரண்டாம் அலையின் போது ஹோமியோபதி, சித்தா, யூனானி போன்ற மருத்துவத்தில் பொது மக்கள் பயன்பெற்றது போல ஒமைக்ரான் தொற்று பரவி வரும் நிலையில் தற்போதும் அதனை பயன்பாடுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்ற அவர்,  கொரொனா காலத்தில் தமிழகத்தில் 77 இடங்களில் இந்திய மருத்துவம் சார்பில் கொரொனா கண்காணிப்பு மையம் தொடங்கப்பட்டது. இந்திய மருத்துவத்திற்காக நிரந்தரமாக 1700 படுக்கைகள் உருவாக்கப்பட்டது, அதேபோல 6700 படுக்கைகள் புதிதாக அமைக்கப்பட்டது. தற்போது அதை மீண்டும் தாயார் நிலையில் வைக்க data cell மையம் தொடங்கி இருக்கிறோம். Data cell மூலம் அனைத்து அரசு மருத்துவமனையிலும் இந்திய மருத்துவம் எப்படி பயன்பெறும் என்பது குறித்த தகவல் தெரிந்து கொள்ளலாம் என்றார். 

மேலும்,  தமிழகத்தில் சித்தா பல்கலைக்கழக புதியாக தொடங்க இருக்கிறோம், அதற்கு இடம் கண்டறியப்பட்டு அதற்கான பணி நடைபெற்று வருகிறது. 10 அல்லது 15 நாட்களில் முதல்வர் அதனை திறந்த வைக்க இருக்கிறார். மாதவரம் பகுதியில் 19.6 எக்கரில் பல்கலைக்கழக கட்ட இருக்கிறோம் என்றார். தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் 97 பேருக்கு S ஜீன் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 34 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டதில், 18 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். 16 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்றார். மேலும், Non risk country யில் இருந்து வருபவர்கள் அனைவருக்கும் கொரொனா பரிசோதனை மேற்கொள்ள அனுமதி கேட்டு கடிதம் எழுதி இருந்தும் இன்னும் அதற்கு பதில் வர வில்லை. இன்று வரும் மத்திய குழு விடம் அது குறித்து பேச இருக்கிறோம்.

தமிழகத்தில் உள்ள மரபணு பரிசோதனை மையத்தில் S ஜீன் பாதிப்பு கண்டறியப்படும் பட்சத்தில் அதனை நாமால் உறுதி செய்ய முடியவில்லை அதற்கு மத்திய அரசு அனுமதி வழங்க வில்லை. மேலும்,  பரிசோதனை மாதிரிகளை பெங்களூருக்கு அனுப்பி வைத்து அவர்கள் அதன் முடிவுகள் தெரிவிக்கும் வரை காத்திருக்க வேண்டி உள்ளது.. அதற்குள் சிகிச்சை பெற்று வருபவர்கள் குணமடைந்து வீட்டிற்கு செல்லும் நிலையில் உள்ளது. நோய் தொற்று காலத்தில் மாநில அரசின் கோரிக்கைக்கு மத்திய அரசு விரைந்து பதிலளிக்க வேண்டும்,  நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒன்றிய அரசின் சார்பில் அனுப்பப்படும் ஓமைக்ரான் முடிவுகள் வெளிவர காலதாமதம் ஆகிறது என்றார். 

எதிர்கட்சிகளால் மட்டுதான் கொரானா பரவுமா என்று  டி.டி.வி தினகரனின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கோவையில் நடந்த திமுக கூட்டம் உள் அரங்கில் நடைபெற்றது. பொது வெளியில் ஊர்வலம் மாநாடு நடத்த மட்டும் தான் தடை விதிக்கப்பட்டுள்ளது.  எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் தனியாக வந்து அஞ்சலி செலுத்த அனுமதி வாங்கி ஊர்வலம் சென்ற ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் ஆகிய அதிமுகவினர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. கோவையில் நடந்த திமுக கூட்டம் உள் அரங்கில் நடைபெற்றது. ஆனால் அமமுக வெளி இடங்களில் கூட்டம் நடத்த அனுமதி கேட்டார்கள், அதனால் தான் அனுமதி கிடைக்க வில்லை. பொது வெளியில் ஊர்வலம் மாநாடு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என கூறினார். நீட்க்கு தேர்வுக்கு விலக்கு வாங்குவதில் மாநில அரசு 100% உறுதியாக உள்ளது. மற்ற கட்சிகளை விட திமுகவுக்கு தான் அதிக அக்கறை உள்ளது.

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி எத்தனை நாட்களுக்கு பிறகு போட வேண்டும் எந்த தடுப்பூசி போட வேண்டும் என்று மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை இன்னும் வழங்க வில்லை என்றார். மேலும், பேரூர் அரசு மேல் நிலை பள்ளியில் முதலவர் 15- 18 வயது குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடக்கி வைக்கிறார். 15- 18 வயது குழந்தைகளுக்கு கோவக்சின் தடுப்பூசி செலுத்த இருக்கிறோம் என தெரிவித்தார்.  இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த வாய்புள்ளதா ?.அதற்கான விதிமுறைகளை பின்பற்றி வருகிறோம், வரும் 11ஆம்  தேதி மருத்துவ வல்லுநர் குழுவின் ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு அது குறித்து முதல்வர் முடிவெடுப்பார். மேலும், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் தற்போது வரை 42 பேருக்கு S ஜீன் பாதிப்பு ஏற்பட்டுள்ளது, அவர்களின் மாதிரிகள் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios