Asianet News TamilAsianet News Tamil

கல்வி நிறுவனம் கடன் வசூல் செய்யும் நிறுவனம் போல் நடந்து கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.! பொங்கி எழுந்த சீமான்.!

கட்டணம் செலுத்த முடியாத மாணவர்களின் பெயர்கள் செப்டம்பர் 6 முதல் பதிவேட்டிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படும் என‌ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது. கல்வி நிலையம் போல் இல்லாமல் கடனை வசூல் செய்யும் நிறுவனம் போல் மிரட்டும் தொனியில் அரசு நடத்தும் பல்கலைக்கழகமே செயல்படுவதென்பது கல்வி வியாபாரமயமாக்கப்பட்டுள்ளதையே வெளிக்காட்டுகிறது.

It is not acceptable for an educational institution to behave like a debt collection company! Seaman who got up in a rage.!
Author
Tamil Nadu, First Published Aug 29, 2020, 9:30 PM IST

பேரிடர் மேலாண்மை சட்டம் – 2005ன் படி 2020-21 ஆம் ஆண்டிற்கான கல்விக் கட்டணத்தைச் செலுத்துமாறு மாணவர்களையோ, பெற்றோர்களையோ கட்டாயப்படுத்தக்கூடாது என்றும், 2019-20 ஆம் ஆண்டிற்கான கட்டணத்தில் ஏதேனும் செலுத்தப்பட வேண்டிய தொகை இருந்தால் அதைச் செலுத்துமாறு கட்டாயப்படுத்தக்கூடாது என்றும், ஏதேனும் கட்டணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டாலும் அதற்குத் தண்டம் வசூலிக்கக்கூடாது என்பதையும் வலியுறுத்தி கடந்த 21.04.2020 அன்று தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை சார்பில் ஏற்கனவே சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.கடன் நிறுவனம் போல் கடனை வசூல் செய்யும் கல்வி நிறுவனத்தின் செயல் கண்டிக்கதக்கது என பொங்கி எழுந்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

It is not acceptable for an educational institution to behave like a debt collection company! Seaman who got up in a rage.!

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.. 

"அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் நடப்புக்கல்வியாண்டுக்கான முதல் பருவக் கட்டணத்தை வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டுமெனவும், செலுத்தத் தவறிய மாணவர்கள் 200 முதல் 500 வரை தண்டம் செலுத்த வேண்டுமெனவும் வெளியிடப்பட்டுள்ள பல்கலைக்கழகத்தின் அறிவிப்பு அதிர்ச்சியளிக்கிறது. கட்டணம் செலுத்த முடியாத மாணவர்களின் பெயர்கள் செப்டம்பர் 6 முதல் பதிவேட்டிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படும் என‌ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது. கல்வி நிலையம் போல் இல்லாமல் கடனை வசூல் செய்யும் நிறுவனம் போல் மிரட்டும் தொனியில் அரசு நடத்தும் பல்கலைக்கழகமே செயல்படுவதென்பது கல்வி வியாபாரமயமாக்கப்பட்டுள்ளதையே வெளிக்காட்டுகிறது.

கொரோனோ நோய்த்தொற்றுப் பரவலில் உலகிலேயே இந்தியா மூன்றாம் இடத்திலும், இந்தியாவில் தமிழகம் இரண்டாம் இடத்திலும் உள்ள நிலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நோய்த்தொற்றுப் பரவலால் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாகப் போடப்பட்டுள்ள தொடர் ஊரடங்கால் நாடு முழுமைக்கும் தொழில்நிறுவனங்கள் முடங்கி வேலைவாய்ப்பும் பறிபோயுள்ளது.

It is not acceptable for an educational institution to behave like a debt collection company! Seaman who got up in a rage.!

மக்கள் நடமாட்டம் இல்லாததால் சிறு, குறு தொழில் முனைவோர், கைத்தொழில் செய்வோர், அன்றாடம் கூலிவேலைக்குச் செல்வோர் என அனைத்துத் தரப்பு மக்களும் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலை இழப்பு, சம்பளக் குறைப்பு, வருமானமின்மை, மருத்துவச்செலவு உள்ளிட்டவற்றால் மக்கள் பெருந்துயரில் சிக்கித் தவிக்கின்றனர். நியாய விலைக் கடைகளில் அனைத்து உணவுப்பொருட்களும் இலவசமாக வழங்கினால்தான் அடித்தட்டு உழைக்கும் ஏழை மக்கள் உயிர்வாழ முடியும் என்ற சூழ்நிலையில் கல்விக்கட்டணத்தை உடனடியாகச் செலுத்துமாறு மாணவர்களைக் கட்டாயப்படுத்துவது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.

பேரிடர் மேலாண்மை சட்டம் – 2005ன் படி 2020-21 ஆம் ஆண்டிற்கான கல்விக் கட்டணத்தைச் செலுத்துமாறு மாணவர்களையோ, பெற்றோர்களையோ கட்டாயப்படுத்தக்கூடாது என்றும், 2019-20 ஆம் ஆண்டிற்கான கட்டணத்தில் ஏதேனும் செலுத்தப்பட வேண்டிய தொகை இருந்தால் அதைச் செலுத்துமாறு கட்டாயப்படுத்தக்கூடாது என்றும், ஏதேனும் கட்டணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டாலும் அதற்குத் தண்டம் வசூலிக்கக்கூடாது என்பதையும் வலியுறுத்தி கடந்த 21.04.2020 அன்று தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை சார்பில் ஏற்கனவே சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அரசின் இந்த உத்தரவை அப்பட்டமாக மீறியுள்ள அண்ணா பல்கலைக்கழகம், உடனடியாகக் கல்விக்கட்டணத்தைச் செலுத்துமாறு கட்டாயப்படுத்துவதென்பது சட்டவிரோத நடவடிக்கையாகும். இது குறித்து மாணவர்கள் பல்கலைகழக நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் பல்கலைகழகத்தரப்பில் எவ்வித முறையான பதிலும் அளிக்கப்படவில்லை என்று தெரியவருகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios