Asianet News TamilAsianet News Tamil

ஐ.டி. ரெய்டுக்கு ஒத்த ஆளா வருவாரு?: தலைமறைவு மாதவனை அன்றே மடக்கிய ஏஸியாநெட் தமிழ்.

IT Is it a ride madhavan
IT Is it a ride madhavan
Author
First Published Feb 12, 2018, 3:16 PM IST


எப்பவாச்சும் காமெடின்னா பரவாயில்ல! எப்பவுமே காமெடி அரசியல் பண்ற தீபா-மாதவன் அண்ட்கோவை விமர்சனம் பண்றதுக்கே கேவலமா இருக்குபா! என்று பொங்குகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

IT Is it a ride madhavan

தீபாவின் வீட்டில் கடந்த சனிக்கிழமையன்று காலை 7 மணியளவில் ஒரு தனி நபர் தன்னை வருமான வரித்துறை அதிகாரி என்று சொல்லிக் கொண்டு உள்ளே நுழைந்ததாக ஒரு பரபரப்பு கிளம்பியது. மீடியாவும், போலீஸும் அங்கே செல்ல, சட்டென்று தெறித்து எஸ்கேப் ஆனார் அந்த வருமான வரித்துறை அதிகாரி. இந்த சம்பவம் தொடர்பாக தீபாவின் கணவர் மாதவன் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அதில் மித்தேஸ் குமார் எனும் பெயரில் ஒரு அடையாள அட்டையை காட்டி தன்னை வருமான வரித்துறை அதிகாரி என்று சொல்லிக் கொண்டு அந்த நபர் உள்ளே நுழைந்ததாக குறிப்பிட்டிருந்த மாதவன், ‘அரசியலில் இயங்கி வரும் எனது மனைவி தீபாவின் உயிருக்கு ஆபத்து இருக்கும் நிலையில்...’ என்றெல்லாம் ஓவராக உருகி ஓடியிருந்தார்.

IT Is it a ride madhavanஇந்நிலையில் அன்று தப்பியோடிய அந்த நபர் இப்போது போலீஸில் சரணடைந்திருக்கிறார். அவரது உண்மையான பெயர் பிரபு. அவர், ’மாதவன் தான் என்னை அன்று வீட்டுக்கு வரச்சொன்னார். சினிமாவில் நடிக்க சான்ஸ் வாங்கி தருகிறேன் என்று சொன்னதால் அவர் சொன்னதை நம்பி சென்றேன்.

அவ்ர்தான் என் கையில் அடையாள அட்டை ஒன்றை கொடுத்து, வருமான வரித்துறை அதிகாரி போல் நடிக்க சொன்னார். நான் பயந்த போது ‘எல்லாமே சினிமாவுக்கான ரிகர்சல்’ என்றார். அதனால் நடிச்சேன். ஆனா அவரே எதிர்பார்க்காமல் போலீஸூம், மீடியாவும் வந்தபோது என்னை எஸ்கேப் ஆக சொல்லி ஐடியா கொடுத்ததும் அவரே.’ என்று கக்கியிருக்கிறார். அதேபோல் காலையில் தீபாவின் கார் வெளியே போன பிறகே மாதவன் தன்னை வீட்டினுள் அழைத்தார் என்றும் கூறியிருக்கிறார் பிரபு.

IT Is it a ride madhavan

தீபா வீட்டில் ரெய்டு நடந்ததாக எழுந்த பரபரப்பில் ஏஸியா நெட் தமிழ் இணையதளத்துக்கு பெரிய சந்தேகம் இருந்தது.
இதனால் போலீஸில் புகார் அளித்துவிட்டு வந்த மாதவனிடம்  ஏஸியாநெட் தமிழ் இணைய தளத்துகாக பிரத்யேகமாக சில கேள்விகள் கேட்டோம். அதில் முதல் கேள்வியாக ‘ஐ.டி. அதிகாரி என்று சொல்லி ஒற்றை நபர் வந்ததும் எப்படி வீட்டுக்குள் அனுமதித்தீர்கள்?’ என்று கேட்டோம். அதற்கு நேரடியாக பதில் சொல்லாமல் மழுப்பியிருந்தார் மாதவன்.

IT Is it a ride madhavan

அதேபோல் ‘மித்தேஸ்குமார் வீட்டுக்குள்ளே வந்தப்ப தீபாவும் இருந்திருப்பாங்களே! அவங்களோட ரியாக்‌ஷன் என்ன?’ என்றும் நாம் அன்றே கேட்டிருந்தோம். அதற்கு ‘தீபா மேடம் அப்போது வீட்டில் இல்லை.’ என்று எஸ்கேப் ஆகியிருந்தார் மாதவன்.

மாதவனின் இந்த தில்லுமுள்ளுக்களை நறுக் கேள்விகளுடன் அன்றே பதிவு செய்திருந்தோம். அந்த மாதவனை இப்போது வலைவீசி தேடும் போலீஸ், நாம் கேட்டிருந்த இதே கேள்விகளை அன்றே கேட்டிருந்தால் மாதுக்குட்டியை ஒரு முயல்குட்டி போல் கையோடு அள்ளிச் சென்று அபிஷேகம் செய்திருக்கலாம்.
இதுதானா போலீஸ் உங்க டக்கு?!

Follow Us:
Download App:
  • android
  • ios