தினகரன் நானே ராஜா நானே மந்திரி போல் செயல்படுகிறார் எனவும் ஜெயலலிதா நியமனம் செய்த நிர்வாகிகளை நீக்குவதற்கு டிடிவிக்கு அதிகாரம் இல்லை எனவும், கடலூர் எம்.பி அருண்மொழி தேவன் தெரிவித்துள்ளார். 

இரண்டு அணியாக இருந்த அதிமுக சில நாட்களுக்கு முன்பு மீண்டும் ஒன்றாக இணைந்தது. ஆனால் டிடிவி தினகரன் செயல்பாட்டால் மீண்டும் அதிமுக இரண்டாக பிரிந்துள்ளது. 

மேலும் எடப்ப்பாடி அணிக்கு நெருக்கமானவர்களை களை எடுப்பதாக கூறி டிடிவி தினகரன் ஒவ்வொருவரையாக கழக பொறுப்பில் இருந்து நீக்குவதாக அறிவித்து வருகிறார். 

அந்த வகையில், இன்றும் எடப்பாடி ஆதரவாளர்களை கட்சி பொறுப்பில் இருந்து நீக்குவதாக டிடிவி அறிவித்துள்ளார். 
இந்நிலையில், செய்தியாளரகளை சந்தித்த கடலூர் எம்.பி அருண்மொழி தேவன், டிடிவி தினகரன் புதிதாக கட்சியை ஆரம்பித்து யாரை வேண்டுமானாலும் நீக்கலாம் யாரை வேண்டுமானாலும் சேர்க்கலாம், ஆனால் இது ஜெயலலிதாவால் நியமனம் செய்யப்பட்டவர்களை அவர் எப்படி நீக்க முடியும் என கேள்வி எழுப்பினார். 

மேலும் டிடிவியின் செயல்பாடுகள் கேலிகூத்தாக உள்ளது எனவும், ஆசை வார்த்தைகள் கூறி எம்.எல்.ஏக்களை இழுக்க முயற்சி செய்கின்றனர் எனவும் குற்றம் சாட்டினார். 

இரண்டு அணிகளும் இணைந்து சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர் எனவும், மக்கள் நலன்களை கருத்தில் கொண்டு எம்.எல்.ஏக்கள் செயல்படவேண்டும் எனவும் தெரிவித்தார். 

டிடிவி தினகரன் மனநலம் மருத்துவரை பார்த்தால் நன்றாக இருக்கும் எனவும் அருண்மொழி  தேவன் குறிப்பிட்டார்.