Asianet News TamilAsianet News Tamil

மு.க.ஸ்டாலினின் பெருமை ஜப்பானில் தெரிவது சந்தோஷம்... தமிழிசை கிண்டல்..!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் பெருமை ஜப்பான் மற்றும் சர்வதேச அளவில் தெரிந்தால் சந்தோஷம் தான் என பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கிண்டலடித்துள்ளார். 

It is a pleasure to know the pride of Stalin in Japan
Author
Tamil Nadu, First Published Jul 24, 2019, 12:09 PM IST

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் பெருமை ஜப்பான் மற்றும் சர்வதேச அளவில் தெரிந்தால் சந்தோஷம் தான் என பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கிண்டலடித்துள்ளார். It is a pleasure to know the pride of Stalin in Japan

தூத்துக்குடி செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ‘’கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்து இருக்கிறது. மக்களின் தீர்ப்பு நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. மக்கள் பா.ஜ.கவுக்கு வாக்களித்து இருக்கிறார்கள். ஆனால், மிக குறைந்த இடங்களை பெற்ற குமாரசாமி கட்சிக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்தது.

தற்போது மக்கள் எந்த ஆட்சி அமைய வேண்டும் என்று நினைக்கிறார்களோ அது நடந்து இருக்கிறது. கர்நாடகாவில் தாமரை மலரும்போது தென் தமிழகத்தில் உள்ள மற்ற மாநிலங்களிலும் பா.ஜ.க வலுப்பெறும். தமிழை நாங்கள் தான் காப்பாற்றி வருகிறோம் என்று மு.க.ஸ்டாலின் சொல்லி வருகிறார். இது தமிழ்தாய்க்கு பொறுக்காது. தமிழை யாரும் காப்பாற்ற வேண்டிய அவசியம் இல்லை. தமிழ் ஒரு முதுமொழி. என்றும் இளமையான மொழி.

It is a pleasure to know the pride of Stalin in Japan

இந்தியை மத்திய அரசு திணிக்க வேண்டிய அவசியம் இல்லை. தபால்துறை, ரெயில்வே துறையிலும் இந்தியை திணிக்க வேண்டிய எண்ணம் மத்திய அரசுக்கு கிடையாது. தமிழின் பெருமையை போற்றுவதில் பா.ஜ.க முதன்மையான கட்சியாக இருக்கும். தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, ஸ்டாலின் பெருமை டெல்லிக்கு தெரிகிறது. தமிழ்நாட்டுக்கு தெரியவில்லை என்று கூறி இருக்கிறார். அவருடைய பெருமை ஜப்பான் மற்றும் சர்வதேச அளவில் தெரிந்தால் சந்தோஷம் தான். ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டு தண்ணீர் பற்றாக்குறை வருவதற்கு தி.மு.க. தான் காரணம்.It is a pleasure to know the pride of Stalin in Japan

தமிழ்நாட்டில் பலமுறை ஆட்சியில் இருந்த தி.மு.க. தண்ணீரை சேமிப்பதற்கான எந்த ஒரு தொலைநோக்கு பார்வையிலும் திட்டத்தை செய்யவில்லை. தமிழகத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கிற கொலை சம்பவங்கள் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. தி.மு.க.வை சேர்ந்தவர்களின் 2-வது கொலை இது. மாணவர்கள், பொதுமக்கள் பயணிக்கும் பேருந்தில் கத்தியுடன் சண்டைபோட்டது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. இதை காவல்துறை தடுக்க வேண்டும்’’ என்று அவர் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios