மத்திய அரசின் வருமான வரித்துறையினர் நடத்தி வரும் தமிழக சோதனைகள் இந்திய அளவில் பெரும் விவாதத்துக்குரிய விஷயம் ஆகியுள்ளது.

எஸ்பிகே குழுமத்தில்  30க்கு மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.   நேற்றைய சோதனையில் கணக்கில் காட்டப்படாத 180 கோடி ரொக்கப்பணமும், 150 கிலோ தங்கமும் சிக்கியதாக தகவல்.   மூட்டை மூட்டையாக கட்டி வைக்கப்பட்டிருந்த பணத்தையும், பெட்டி பெட்டியாக அடிக்கி வைக்கப்பட்டிருந்த தங்கத்தையும் பார்த்து வருமான வரித்துறை அதிகாரிகள் திகைப்பில் ஆழ்ந்துள்ளனர்.  ’ஆபரேஷன் பார்க்கிங் மனி’ என்ற பெயரில் கார்களில் பதுக்கி வைக்கப்பட்ட கருப்புப்பணத்தை கைப்பற்றினர்.  ஆனாலும்  சோதனை இன்னும் முற்று  முடிந்ததாக வருமான வரித்துறை  சொல்லவில்லை.

“தமிழக நெடுஞ்சாலைத் துறை மட்டுமல்ல, வேறு எந்தத்துறையாக இருந்தாலும் நேரடியாக  எந்த கான்ட்ராக்டரும் அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதியிடம் லஞ்சப் பணத்தைக் கொடுப்பதில்லை. அதற்கென  இவர்களுக்கு இடையில் அதிகாரிகள் இருக்கிறார்கள்.

யாருக்கு கான்ட்ராக்ட் கொடுப்பது என்று  அமைச்சர்கள் தால் முடிவு செய்வார்கள்.  அதற்க்கு தகுந்ததைப்போல  டெண்டர்கள் தரார் செய்வார்கள். காண்ட்ராக்டர் கொடுக்கும் பணத்தை வாங்கி உரிய வழியில் கொடுக்குமாறு அதிகாரிகளுக்கு  தகவல் கிடைக்கும். அதுபோலவே அந்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கான்ட்ராக்டர்களிடம் இருந்து லஞ்சப் பணத்தை வசூலித்து தங்களின் சிறு பங்கை மட்டும் எடுத்துக்  சேரவேண்டிய இடத்தில மொத்தமாக செட்டில் செய்துவிடுவார்கள்.

இந்த நடைமுறையை உறுதிப்படுத்திக் கொண்ட வருமான வரித்துறை இதுபோல நெடுஞ்சாலைத் துறையில் லஞ்சப் பாலமாக செயல்படும் அதிகாரிகளின் பெயரைப் பட்டியலை தயாரித்துள்ளனர். இவர்கள் அனைவரையும் விசாரிக்க ரகசியமாக  ஆபீஸ் ரூம் தயார் செய்துள்ளார்களாம். இவர்கள் பதிலிலிருந்தே அடுத்த கட்டமாக ஆக்ஷனில் குதிக்குமாம் ஐடி.