அமமுக கட்சியிலிருந்து விலகிய அமமுக  தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநில செயலாளர் ஜெ.இஷிகா ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து அதிமுகவில் தன்னை அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார்.

நாளுக்கு நாள் நிர்வாகிகள் அமமுகவை விட்டு விலகிச் செல்வதால் டி.டி.வி.தினகரனின் கோட்டை தரைமட்டமாகி வருகிறது. அந்த வகையில் ஜெ.இஷிகா கட்சியை விட்டு சென்றது டி.டி.வி.தினகரனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காரணம் டி.டி.வி.தினகரம் இந்த இந்த இஷிகா மீது பெரும் நம்பிக்கை வைத்திருந்தார்.  

இஷிகா அமமுகவுக்கு வந்தவுடன் தொழில்நுட்ப பிரிவை ஆண்கள் - பெண்கள் என இரண்டு சார்புகளாக பிரித்தார். அதோடு மட்டுமின்றி ஐ.டி.விங் மகளிர் பிரிவு மாநில செயலாளராக ஜெ.இஷிகாவை நியமித்தார். அதன் பின்னர், இஷிகா, தினகரனை சந்தித்த போட்டோ வாட்ஸ்அப்-ல் வைரலாகிப்போனது. இந்த ஜெ.இஷிகா மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.வும், அமமுகவின் தூணாக இருந்தவர்களில் ஒருவரான மேலூர் சாமியின் நெருங்கிய உறவினராம். மேலூர் சாமிக்கு மரியாதை செலுத்தும் வகையிலேயே கட்சியில் செயல்பட்டு வந்த இஷிகாவுக்கு முக்கிய பொறுப்பு கொடுத்திருந்தார் டிடிவி தினகரன்.

ஆனால், அதையெல்லாம் மறந்து விட்டு ஜெ.இஷிகா தற்போது அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். இந்த செய்தி மதுரை பகுதி அமமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.