அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள மட்டும் அனுமதிக்கப்படும். அனைத்து வழிபாட்டு தலங்களிலும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. சமுதாய கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தற்போது நடைமுறையில் உள்ள தடை தொடரும். 

ஊரடங்கின் போது பொதுப் பேருந்துகள் மற்றும் புறநகர் ரயில்களில் உள்ள இருக்கைகளில் 50 சதவீதம் மட்டுமே பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா நோய்த்தொற்று கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன் இதர விவரம் பின்வருமாறு:- மழலையர் காப்பகங்கள் தவிர மழலையர் விளையாட்டு பள்ளிகள், நர்சரி பள்ளிகள் செயல்பட அனுமதி இல்லை. அனைத்து பள்ளிகளும் 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்படுகிறது. 

பொதுத் தேர்வுக்கு செல்லும் மாணவர்கள் கல்வி மற்றும் எதிர்கால நலன் மற்றும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஏதுவாக 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும். அரசு தனியார் மருத்துவ மற்றும் துணை மருத்துவ கல்லூரிகள் தவிர அனைத்து கல்லூரிகள் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவர்கள் தேர்வு எழுதும் பொருட்டு ஜனவரி 20ஆம் தேதி வரை விடுப்பு அளிக்கப்படுகிறது. அனைத்துவித பயிற்சி நிலையங்கள் செயல்பட தடை விதிக்கப்படுகிறது. பொருட்காட்சிகள் மற்றும் புத்தக கண்காட்சி நடத்துவது தற்போது ஒத்தி வைக்கப்படுகிறது. மெட்ரோ ரயிலில் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும். அனைத்து அரசு மற்றும் தனியார் நடத்தப்படும் பொங்கல் மற்றும் கலை விழாக்கள் ஒத்திவைக்கப்படுகிறது. அனைத்து பொழுதுபோக்கு கேளிக்கை பூங்காக்கள் தடை விதிக்கப்படுகிறது.

அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள மட்டும் அனுமதிக்கப்படும். அனைத்து வழிபாட்டு தலங்களிலும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. சமுதாய கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தற்போது நடைமுறையில் உள்ள தடை தொடரும். மீன் மற்றும் காய்கறி சந்தைகளில் குறிப்பாக வார இறுதி நாட்களில் பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் மீன் மற்றும் காய்கறி சந்தை அமைக்க சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தற்போது செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த பேருந்து நிலையங்களில் இருந்து செல்லும் பேருந்துகளை மண்டலம் வாரியாக பிரித்து வெவ்வேறு இடங்களிலிருந்து பேருந்துகளை இயக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள போக்குவரத்து துறை மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் அறிவுறுத்தப்படுகிறது.

கடைகள், வணிக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் அனைத்து சேவை துறைகள் போன்ற பொதுமக்கள் செல்லும் இடங்களில் பணிபுரியும் பணியாளர்கள், உரிமையாளர்கள் அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி கட்டாயம் செலுத்தி இருக்க வேண்டும். ஊரடங்கு காலத்தில் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் இரவு நேர பணிக்கு செல்லும்போது தங்கள் அலுவலக அடையாள அட்டை மற்றும் தடுப்பூசி செலுத்தி கொண்டமைக்கு சான்றிதழ்களை வைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாட்கள் தீவிரமாக்கப்பட்டுள்ள நிலையில் இந்தாண்டு பொங்கள் கொண்டாட்டங்கள் இடம்பெறுவது சந்தேகமே. ஏன் எனில் இந்த கட்டுப்பாடுகள் மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடதக்கது.