மு.க.ஸ்டாலின் முன் இப்படியொரு அவமானமா..? கடுகடுக்கும் திமுக நிர்வாகி..!
திமுகவில் இளம் ரத்தங்களின் வருகை சீனியர் நிர்வாகிகளின் வயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பித்திருக்கிறது. குருநில மன்னர்களைப் போல ஒரு காலத்தில் கோலோச்சி வந்தவர்களுக்கு எதிராக இப்போது கொம்பு சீவப்பட்டு வருகிறது என்கிறார்கள் அகட்சியில் உள்ள சீனியர்கள் சிலர்.
திமுகவில் இளம் ரத்தங்களின் வருகை சீனியர் நிர்வாகிகளின் வயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பித்திருக்கிறது. குருநில மன்னர்களைப் போல ஒரு காலத்தில் கோலோச்சி வந்தவர்களுக்கு எதிராக இப்போது கொம்பு சீவப்பட்டு வருகிறது என்கிறார்கள் அகட்சியில் உள்ள சீனியர்கள் சிலர்.
அப்படியொரு இக்கட்டான நிலையில் சிக்கி இருக்கிறார் திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு. திருச்சி, மணப்பாறை அருகில் உள்ள சீகம்பட்டியில் தி.மு.க., சார்பில், கிராம சபை கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, கிராம மக்களிடம் குறைகளை கேட்டுக் கொண்டு இருந்தார். அப்போது, முத்து என்கிற திமுக பெண் தொண்டர் ஒருவர் திடீரென எழுந்து 'கே.கே.எம்.தங்கராசா காலத்தில் இருந்த, தி.மு.க., இப்போ இல்லை'’ என இப்போதைய மாவட்டச் செயலாளரும், திருச்சி மேற்கு தொகுதி எம்.எல்.ஏவுமான கே.என்.நேருவை, குத்தி காட்டுவது போல ஆவேசமாக பேசிய அவர், தொடர்ந்து, 'மணப்பாறை ஒன்றியச் செயலருக்கு, எம்.எல்.ஏ., சீட் கொடுத்தால் அவர் வெற்றி பெற்று விடுவார் எனச் சொல்லி விட்டு அமர்ந்திருக்கிறார்.
இதைக் கேட்டு, ஸ்டாலின் அருகில் இருந்த கே.என்.நேரு, அதிர்ச்சி ஆகி விட்டாராம். தன்னை குறை சொல்ல, இந்த பெண்மணியை துாண்டி விட்ட கறுப்பாடு யார் என கட்சிக்குள் விசாரணை நடத்திக் கொண்டு இருக்கிறார். ஒருவேளை, இது ஸ்டாலினின் செல்லப் பிள்ளையாக வலம் வரும், மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏவின் வேலையாக இருக்கலாம் என கே.என்.நேரு சந்தேகப்படுகிறாராம்.
ஏற்கெனவே கே.என்.நேருவை ஓரம் கட்ட மகேஷ் பொய்யாமொழியை திருச்சி பகுதியில் களமிறக்கி இருக்கிறார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் என்கிற பேச்சு திருச்சியில் பரபரத்து வருகிறது.