Asianet News TamilAsianet News Tamil

திமுக விசுவாசிக்கு அதிமுகவில் பதவியா..? ஹக்கீம் ஆடும் கதகளியாட்டம்..!

 "நான்தான் அடுத்த நகர செயலாளர்" என்று அனைவரிடமும் சொல்லிக்கொண்டு, திமுகவை சேர்ந்த நகர செயலாளருடன் கைகோர்த்து கந்துவட்டி தொழிலையும் மறைமுகமாக செய்துகொண்டிருப்பதாக புகார்வாசிக்கிறார்கள். 
 

Is there a position in the AIADMK for a DMK believer? Hakeem playing Kathakaliyattam
Author
Tamil Nadu, First Published Nov 23, 2020, 2:33 PM IST

காலியாக உள்ள உடுமலைப்பேட்டை அதிமுக நகராட்சி செயலாளர் பதவி இன்னும் சில நாட்களில் நிரப்பப்பட உள்ள நிலையில், அங்கு பிரளயமே நடந்து கொண்டு இருக்கிறது. Is there a position in the AIADMK for a DMK believer? Hakeem playing Kathakaliyattam

இதுகுறித்து அந்தப்பகுதியை சேர்ந்த அதிமுக விசுவாசி ஒருவர் கூறுகையில், ‘’உடுமலைப்பேட்டை முன்னாள் நகராட்சி கவுன்சிலர் மற்றும் அமைப்பு சாரா ஓட்டுனர்கள் அணி மாவட்ட செயலாளர் மற்றும்  கூட்டுறவு சங்கத் தலைவர் என்ற முறையிலும், தி.மு.க.வின் நகர செயலாளர் மத்தினின் ரியல் எஸ்டேட் பார்ட்னர். அந்த முறையில், ஹக்கீம் உடுமலைப்பேட்டையில் அனைத்து இடங்களிலும், கட்டபஞ்சாயத்து செய்தல் மற்றும் நடை பாதையில் உள்ள அனைத்து கடைகளிலும் பணம் வசூலிப்பதாக கூறப்படுகிறது. இதனால், அதிமுகவுக்கு  கலங்கத்தை ஏற்படுகிறது என்கிறார்கள் உடுமலை நகரவாசிகள். நகராட்சியில் செய்யப்படும் அனைத்து வேலைகளிலும் கமிஷன் பெற்றுக்கொண்டு கட்சிக்கு கலங்கத்தை விளைவிக்கும் வகையில் நடந்து கொள்கிறார் என குற்றம்சாட்டுகிறார்கள்.

மதுக்கடைகளில் மறைமுகமாக மதுபானம் விற்பனை செய்யும் தொழிலை தனது  திமுக நண்பர்களை வைத்து செய்து வருவதாகவும் புகார் கூறுகிறார்கள். மூன்று ஆண்டுகளாக நகராட்சியின் நகர செயலாளர் பதவி நிரப்பப்படாத நிலையில், "நான்தான் அடுத்த நகர செயலாளர்" என்று அனைவரிடமும் சொல்லிக்கொண்டு, திமுகவை சேர்ந்த நகர செயலாளருடன் கைகோர்த்து கந்துவட்டி தொழிலையும் மறைமுகமாக செய்துகொண்டிருப்பதாக புகார்வாசிக்கிறார்கள். 

கடைமட்ட தொண்டர்கள் முதல் வார்டு செயலாளர்கள் வரை அனைவரும் இவர்மீது அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது. நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் இஸ்லாமியர்கள் அனைவரும் ஒன்று கூடி அதிமுகவுக்கு ஓட்டு கேட்கக் கூடாது என்று ஜமாத்தில் முடிவு செய்து விட்டார்கள் என்று சொல்லி ஹக்கீம் கட்சிக்கு  ஓட்டு கேட்க வரவில்லை. கழகத்தின் கொள்கையை மீறி தி.மு.க நகர செயலாளர் மத்தினுடன் தொடர்பு வைத்துக்கொண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கு ஓட்டு சேகரித்து கொடுத்துள்ளார். வரும் சட்டமன்றத் தேர்தலிலும் இதேபோல் நடப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். அதிமுகவின் கொள்கையை மீறி, மாற்று கட்சியுடன் தொடர்பு வைத்துக்கொண்டு கழகத் தொண்டர்களை யாரையும்  ஹக்கீம் மதிப்பதில்லை. Is there a position in the AIADMK for a DMK believer? Hakeem playing Kathakaliyattam

உடுமலை சட்டமன்றத் தொகுதி அலுவலகத்திற்கு அமைச்சர் வரும்போது மட்டும், "நான்தான் தான் எல்லா வேலையும் செய்கிறேன்" என்று தூபம் போடுகிறார். ஆனால், அதிமுகவிற்காக ஹக்கீம் எந்த வேலையும் செய்வதில்லை. அவர் தி.மு.க.,காரர்களுக்கு மட்டுமே கையூட்டு பெற்றுக்கொண்டு செய்து கொடுக்கிறார். 

முதல்வர், கழக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்கனவே பதவியில் இருப்பவர்களுக்கு புதிதாக பதவி எதுவும் போட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். அதனை மனதில் வைத்து விருப்பு வெறுப்பின்றி செயல்படுபவர்களுக்கு பதவி வழங்க வேண்டும்’’என்கிறார்.

Follow Us:
Download App:
  • android
  • ios