Is there a dual gun bomb? Is not it? Jai Anand teasing!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி திவாகரன் வெற்றி பெற்றதை அடுத்து அவரின் ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர். தினகரனின் இந்த வெற்றியை அடுத்து, அவரது குடும்பத்தார் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளதாக தெரிகிறது. 

தேர்தல் வாக்குப்பதிவு முந்தைய நாள் அன்று, மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த வீடியோ ஒன்று, தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டிருந்தார். அதற்கு தினகரன் குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்றில் இருந்தே முன்னிலையில் இருந்த தினகரனின் வெற்றி உறுதியானது. இதையடுத்து, அவரது குடும்பத்தார்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஜெயா டிவியின் சிஇஓ விவேக், தினகரனுக்கு வாழ்த்து கூறியதாக தெரிகிறது.

ஓ.பி.எஸ்-ம் நானும் இரட்டைக்குழல் துப்பாக்கி போன்று செயல்படுவோம் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். இந்த நிலையில், ஆர்.கே.நகரில் அதிமுக தோல்வி அடைந்தது. அதனைக் குறிக்கும் விதத்தில் இரட்டைக் குழல் துப்பாக்கியில் குண்டு இருக்கிறதா? என்று ஜெய் ஆனந்த், பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. அந்த படத்திற்கு கீழே, இரட்டைக் குழல் துப்பாக்கி போல் செயல்படுவோம் - எடப்பாடி என்று உள்ளது. இதன்கீழ், இரட்டைக்குழல் துப்பாக்கி ஒன்று உள்ளது. அதற்கு கீழே தினகரன் படமும், ஜெயானந்த் திவாகரன் படமும் உள்ளது. இவ்விரு படங்களுக்குக்கீழ், ஜெயானந்தின், பஞ்ச் வசனம் ஒன்று இடம் பெற்றுள்ளது. அதாவது இரட்டைக் குழல் துப்பாக்கி வைத்திருப்பது ஒரு பக்கம் இருக்கட்டும்... அதில் குண்டு இருக்கின்றதா இல்லையா??? - ஜெய்ஆனந்த் திவாகரன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜெய் ஆனந்தின் இந்த பேஸ்புக் பதிவு தற்போது தினகரன் ஆதரவாளர்களிடையே வெகு வேகமாக பரவி வருகிறது. இது மட்டுமல்லாது, சமூக வலைத்தளங்களில் இந்த படம் அதிகமாக பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.