மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்ய முடியாது என கர்நாடக மாநில ஐபிஎஸ் அதிகாரி ரூபா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

வாக்கு எண்ணிக்கையின் போது தேர்தல் ஆணையத்தை கையில் வைத்துக் கொண்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோல்மால் செய்து பாஜக சூழ்ச்சி செய்யலாம் என பலரும் வதந்திகளை பரப்பி வருகிறார்கள். எதிர்கட்சிகளும் இதே விவகாரத்தை கிளப்பி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

இந்நிலையில் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ள ஐபிஎஸ் அதிகாரியான ரூபா, ‘’வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்வது என்பது இயலாதது. அனைத்து ஐஏஎஸ் அதிகாரிகளும், மாநில நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகளும் நாடு முழுவதும் ஹேக் செய்ய முடியாது. 

ஏனென்றால் அவர்கள் வாக்கு எண்ணிக்கை முடிந்து பணிக்கு திரும்ப வேண்டும். இந்த சூழலில் அவர்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்ய அனுமதித்தால் அவர்கள் பணியை பாதிக்கும் என்பதால் எப்படி அனுமதிப்பார்கள்? எல்லாவற்றையும் விலைக்கு வாங்கி விட முடியாது’’ எனத் தெரிவித்துள்ளார். பெங்களூரு சிறையில் சசிகலா சொகுசாக இருக்க லஞ்சம் கொடுத்த விவகாரத்தை துருவி எடுத்தவர் தான் இந்த ரூபா. 

 

தன்னை எப்போதும் அழகாக வைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுபவர் ரூபா. அடிக்கடி அழகிப் போட்டியில் கலந்து கொண்டு பரிசுகளை அள்ளி வருபவர். 'மிஸ் தாவனகரே' பட்டத்தையும் பெற்றுள்ளார். நேர்மையானவரும் கூட.  இப்படிப்பட்ட அழகான ஐபிஎஸ் அதிகாரி சொன்னால் நம்பித்தானே ஆக வேண்டும்.