Asianet News TamilAsianet News Tamil

ரூ.18,000 கோடிக்கு விற்றுவிட்டு ரூ.46,262 கோடி கடன் சுமையா..? ஏர் இந்தியா நிறுவனத்தில் நடப்பது என்ன..?

இந்திய நாட்டின் சொத்துக்களை மத்திய அரசு இடைவிடாமல் கொள்ளையடித்து வருகிறது. ஏர் இந்தியாவை ரூ.18 ஆயிரம் கோடிக்கு மத்திய அரசு விற்றுள்ளது.
 

Is Rs 46,262 crore debt burden after selling for Rs 18,000 crore? What is happening at Air India?
Author
Delhi, First Published Oct 12, 2021, 11:53 AM IST

அரசு நிறுவனமான ஏர் இந்தியா தொடர்ந்து வருவாய் இழப்பில் இயங்கி வந்த நிலையில், அந்த நிறுவனத்தை ரூ.18 ஆயிரம் கோடிக்கு டாடா நிறுவனம் ஏலத்தில் எடுத்து சொந்தமாக்கி உள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் இறுதிக்குள் ஏர் இந்தியாவை விற்பதிற்கான அனைத்து நடைமுறைகளும் நிறைவு பெறும் என கூறப்பட்டுள்ளது.Is Rs 46,262 crore debt burden after selling for Rs 18,000 crore? What is happening at Air India?

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். ’’இந்திய நாட்டின் சொத்துக்களை மத்திய அரசு இடைவிடாமல் கொள்ளையடித்து வருகிறது. ஏர் இந்தியாவை ரூ.18 ஆயிரம் கோடிக்கு மத்திய அரசு விற்றுள்ளது.

இது டாடா நிறுவனத்திற்கு மோடி அரசு அளிக்கும் இலவச பரிசு போல் உள்ளது. இது பட்டப்பகலில் நடந்துள்ள கொள்ளையாகும். டாடா நிறுவனம் ரூ.15,300 கோடிக்குக் கடனை ஏற்றுக்கொண்டாலும் அது மறுசீரமைக்கப்பட்டு விடும். மீதி ரூ.2 ஆயிரத்து 700 கோடியை மட்டுமே ஒன்றிய அரசுக்குக் கொடுக்கும்.Is Rs 46,262 crore debt burden after selling for Rs 18,000 crore? What is happening at Air India?

ஆனால், ஏர் இந்தியாவின் மீதி கடன் ரூ.46 ஆயிரத்து 262 கோடியை மத்திய அரசுதான் ஏற்க வேண்டி இருக்கும். இதனால், மக்கள் தலையில் ரூ.46 ஆயிரம் கோடி கடன் சுமத்தப்படும். அதேநேரம் டாடா நிறுவனத்திற்கு ஏர் இந்தியாவின் அனைத்து சொத்துக்களும் சொந்தமாகிவிடும்” என தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios