நாடு இருக்கின்ற பொருளாதார மந்த நிலையில் இடைத்தேர்தல்களே தேவை இல்லை! அதிலும் இன்னும் ஒன்றரை வருட காலத்தில் அடுத்த பொது தேர்தல் வர உள்ள நிலையில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டசபை தொகுதிகளில் இடைத்தேர்தல் அவசியமே இல்லை! என்பதுதான் பாமரனும் அடித்துச் சொல்லும் விஷயம். 
ஆனால் இதைப் பற்றி எதையும் அலட்டிக் கொள்ளாமல் இடை தேர்தலுக்கு உத்தரவிட்டாகிவிட்டது. 

இதில் நாங்குநேரி தொகுதியை காங்கிரஸுக்கு ஒதுக்கிவிட்டு, நகர்ந்து கொண்டது தி.மு.க. அங்கே அ.தி.மு.க. நேரடியாக போட்டியிடும் நிலையில் வலுவான வேட்பாளர் ஒருவரை காங்கிரஸும் தேடியது. வலுவான என்றால், பணத்தில் வலுவானவர்! என்பதே பொருளாம். இந்த தொகுதியில் சீட் கேட்டு 25 பேர் விருப்ப மனு வாங்கினார்கள், அதில் 16 பேர்தான் டிபாசிட் பணம் கட்டினர். அவர்களில் இதே தொகுதியின் மாஜி  எம்.எல்.ஏ.வான வசந்தகுமாரின் அண்ணன் குமரி அனந்தனும் ஒருவர். அவர் போக வசந்தகுமாரின் மைத்துனர் எம்.எஸ்.காமராஜ், இன்னொரு உறவினர் ரூபி மனோகன் ஆகியோரும் இருந்தனர். இந்த பதினாறு பேரில் ரூபி மனோகரனுக்கு ஸீட் ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது வசந்த குமாரின் மிக நெருங்கிய உறவினருக்கு ஸீட் தரப்பட்டுள்ளது. 

இதனால் கதர் தொண்டர்களும், இரண்டாம் நிலை முதலான நிர்வாகிகளும் கொதித்துப் போய்விட்டனர். ‘இந்த தொகுதியில் மண்ணின் மைந்தர்கள் யாருமே எம்.எல்.ஏ.வாக லாயக்கில்லையா? ஏன் வேட்பாளரை இறக்குமதி செய்ய வேண்டும்?’ என்று கொதித்திருக்கின்றனர். இச்சூழலில், விஜயநாராயணம் பகுதியை சேர்ந்த பாராளுமன்ற இளைஞர் காங்கிரஸின் மாஜி தலைவர் எம்.எம்.ராஜா வெளிப்படையாகவே தங்கள் இயக்க தலைவர்களை விமர்சிக்கிறார் இப்படி “நாங்குநேரி தொகுதியில் என் மகனுக்கோ, மைத்துனருக்கோ ஸீட் கேட்க மாட்டேன் என்று ஓப்பனாக அறிவித்த வசந்தகுமார், இப்போது தனது சகலையான ரூபி மனோகரனுக்கு ஸீட் வாங்கிக் கொடுத்துள்ளார். 

இந்த நாங்குநேரி தொகுதியை காங்கிரஸ் என்ன வசந்தகுமாருக்கு பட்டா போட்டுக் கொடுத்துவிட்டது! விருப்ப மனு கொடுத்தவர்களிடம் ‘20 கோடி இருந்தால் வா’ என்றார்கள். ‘இருக்கிறது’ என்று சொன்னவர்களிடம் ‘முப்பது கோடி புரட்ட முடியுமா?’ என்று டென்ஷனாக்கியிருக்கிறார்கள். எங்கள் கட்சியிடம் இல்லாத பணமா? சாதாரண தொண்டனை இங்கே நிறுத்தி, செலவு செய்ய வேண்டிதானே! அ.தி.மு.க. இதைத்தானே செய்துள்ளது. 

இந்த ரூபி மனோகரன் கறுப்பா, சிவப்பா என்று கூட தொகுதிக்காரர்களுக்கு தெரியாது. பிஸ்னஸ்மேனான அவர், ஜெயித்தாலும்  காஞ்சிபுரத்திலேயேதான்  உட்கார்ந்திருப்பார். ஒரு மனு கொடுக்கணும்னா அங்கேயா போக முடியும்?இது காங்கிரஸுக்கு அழிவு காலம்தான்.” என்று வெளுத்திருக்கிறார் 
வெளங்கிடும்.