சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘’மேட்டுப்பாளையத்தில்  'தீண்டாமைச் சுவர்' இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்திருக்கும் கொடுமையை என்னவென்று சொல்வது? மாவட்ட நிர்வாகத்தையும் காவல் துறையையும் அநியாயமான முறையில் ஆட்டுவிப்பது யாரென்று ஊர் உலகத்திற்கு அறிவிக்கப்பட வேண்டும். சட்டப்படி உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’’என அறிக்கை வெளியிட்டார்.

 

அவரது அறிக்கைக்கு பிறகு #தீண்டாமைச்சுவர்_17_பேர்_பலி என்கிற ஹேஷ்டேக் ட்விட்டர் பக்கத்தில் ட்ரெண்டானது. #Mettupalayam17death ஹேஸ்டேக்கும் ட்ரெண்டானது. ஆனால், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பலரும் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.

 


இதனையடுத்து, மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர் பதிவி, ’’மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து பலியானோரின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினேன். இதயம் கனத்தது. 4 குடும்பங்கள் நிர்மூலமாகி உள்ளன! மாவட்ட ஆட்சியரிடம் பாதிப்புகள் குறித்துப் பேசினேன். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் கோரிக்கைகளை நிறைவேற்ற ஆவன செய்ய வலியுறுத்தி உள்ளேன்’’ என கூறியுள்ளார் இந்தப்பதிவில் தீண்டாமை சுவர் என்பதை குறிப்பிடாமல் வெறு சுவர் எனக் குறிப்பிட்டுள்ளார்.