Asianet News TamilAsianet News Tamil

பகைவருக்கும் அருளும் உள்ளம் - அதுதான் ஜெயலலிதா..!!!

iron lady-jayalalitha
Author
First Published Dec 8, 2016, 11:54 AM IST


உதவும் உள்ளம் ஒருவகை பகைவருக்கு உதவுவது அது இன்னொரு வகை . சிலருக்கு மட்டுமே அது இயல்பாக அமையும் அவர்கள் வரலாற்றில் போற்றப்படுவார்கள். அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் மறைந்து 29 ஆண்டுகள் ஆனாலும் மக்கள் உள்ளங்களில் இன்றும் வாழ்ந்து வருவதற்கு முக்கிய காரணம் அவரது உதவும் உள்ளம் மட்டுமல்ல , பகைவர்களுக்கும் உதவியது தான் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. 

எம்ஜிஆருக்கு பின்னர் கருணாநிதி என்னும் மிகப்பெரிய செல்வாக்கு , சொல்லாண்மை மிக்க தலைமையை , திமுக என்னும் மாபெரும் இயக்கத்தை எதிர்த்து கட்டிக்காக்க மிகப்பெரும் மக்கள் செல்வாக்கு வேண்டும் என்ற நிலையில் தான் அதிமுக இரண்டாம் கட்ட தலைவர்கள் ஜெயலலிதாவை தூக்கி பிடித்தனர். 

iron lady-jayalalitha

இப்படி குறுகிய காலத்தில் தலைவியாக ஜெயலலிதா வந்தாலும் உடனடியாக 91 முத்ல் 96 வரை அமைந்த ஆட்சியின் வேகம் அவரை வைத்து பலரும் ஆட்சியில் விளையாட எல்லா தவறுகளும் 96 படுதோல்விக்கு பின்னர் ஜெயலலிதா தலை மீது விழுந்தது. நெருக்கடியான 96-2001 காலகட்டம் அவரை மிகவும் சிந்திக்க வைத்தது. 

அந்த இக்கட்டான காலகட்டம் ஜெயலலிதாவுக்கு 50 ஆண்டுகளின் அனுபவத்தை அளித்தது. அதன் பின்னர் தன்னை மக்கள் தலைவராக மாற்றினால் மட்டுமே எம்ஜிஆர் கட்டிகாத்த இயக்கத்தை முன்னெடுத்து செல்ல முடியும் என்று உறுதிபூண்டார். அதன் பின்னர் ஜெயலலிதாவின் அரசியல் பார்வையும் அவரது கூர்ந்து நோக்கும் எண்ணமும் வேறாக இருந்தது. 

iron lady-jayalalitha

பகைவர்களை தன்னிடம் இழுத்து அவர்களை டம்மி ஆக்கிவிடுவது திமுக தலைவரின் போக்கு என்றால் , பகைவர்களை உதவி செய்து அவர்களை விசுவாசிகளாக்கும் எம்ஜிஆரின் பார்முலாவை கையிலெடுத்தார் ஜெயலலிதா. எல்லோருக்கும் இரும்பு பெண்மணியாக தெரிந்த ஜெயலலிதா இளகிய மனம் கொண்டவர் , உதவும் குணம் கொண்டவர் எனப்து எத்தனை பேருக்கு தெரியும். அதன் சில பதிவுகள் தான் இந்த கட்டூரையின் நோக்கம். 

முதலமைச்சர் எம்ஜிஆரை அரசியல் மேடைகளில் மட்டுமல்ல சினிமாவிலும் எதிர்த்து வசனம் பேசி திமுக ஆதரவு சிந்தனையை வெளிப்படுத்தியவர் எஸ்.எஸ்.சந்திரன். எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர்  ஜெயலலிதாவை அரசியல் மேடைகளில் , சினிமாவில் அதே போல் விமர்சனம் செய்து தனது திமுக விசுவாசத்தை காண்பித்தார் எஸ்.எஸ்.சந்திரன். 

iron lady-jayalalitha

ஆனால் வழக்கம் போல் அவருக்கும் சொந்த பிரச்சனைகள் வர திமுக தலைமையின் உதவியை கேட்க அவருக்கு கிடைக்கவில்லை. இதய நோயால் வாடிய அவருக்கு உடனடியாக சிகிச்சை செய்ய வேண்டும் . தான் இத்தனை ஆண்டுகள் விசுவாசமாக இருந்த கட்சி தலைமையிடமிருந்து உதவி எதுவும் கிடைக்காத நிலையில் வாடி நின்ற அவருக்கு அவரது நண்பர்கள் சொன்ன ஆலோசனை ஜெயலலிதாவை போய் பாருங்கள் என்று.

இதை கேட்டு சிரித்த எஸ்.எஸ்.சந்திரன் போங்கப்பா அந்தம்மாவை நான் எவ்வளவு விமர்சித்திருக்கிறேன், சினிமாவில் எப்படியெல்லாம் விமர்சனம் செய்து காட்சிகள் வைத்திருக்கிறேன், எதிர்கட்சியை சேர்ந்தவன் எனக்கு உதவுவார்களா என்று கேட்டுள்ளார். அதற்கு நண்பர்கள் கேட்டுத்தான் பாருங்களேன் என்று கூறியுள்ளனர்.

iron lady-jayalalitha

தயங்கி தயங்கி எஸ்.எஸ்.சந்திரன் அப்பாயிண்ட்மெண்ட் கேட்டுள்ளார். உடனடியாக கிடைத்துள்ளது. நேரில் சென்றுள்ளார். உடல் படபடக்க என்ன சொல்ல போகிறாரோ என்று போய் நின்றவரிடம் வாங்க சந்திரன் எல்லாம் கேள்வி பட்டேன் உங்களுக்கு வேண்டிய மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துள்ளேன் என்று உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க உத்தரவிட்டு அனைத்து செலவுகளையும் ஏற்றார். 

இதனால் உருகிப்போன எஸ்.எஸ்.சந்திரன் பின்னர் முதல்வர் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசி ஆனார். அவருக்கு ராஜ்யசபா எம்பி உட்பட நல்ல பதவிகள் கொடுத்து தூக்கி விட்டார் ஜெயலலிதா. தான் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னால் ஜெயலலிதா அமர்ந்திருந்த மேடையில் இந்த நிகழ்வை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட எஸ்.எஸ்.சந்திரன் எல்லோரும் வேண்டுதலுக்கு திருப்பதி போவார்கள் எனக்கு திருப்பதி நீங்கள் தான் அம்மா உங்களை சுற்றிவந்தால் போதும் என் வேண்டுதல் நிறைவேறி விடும் என்று மேடையில் பகீரங்கமாக சொன்னார். 

iron lady-jayalalitha

இதே போல் திமுக தலைமை கழக பேச்சாளர் மறைந்த தீப்பொறி ஆறுமுகம் முதல்வர் பற்றி ஆபாச அர்ச்சனைகள் செய்து புகழ்பெற்றவர். அவருக்கும் உடல் நல பாதிப்பு , துன்பங்கள் வந்த போது வழக்கம் போல் தலைமை கைவிட நண்பர்கள் ஆலோசனையின் பேரில் முதல்வர் 2001 ல் ஜெயலலிதாவை சந்திக்க அவரது உடல்நல சிகிச்சைக்கு உதவி , உடனடியாக அவருக்கு சொந்தமாக சுமோ வேன் உள்ளிட்ட எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தார் ஜெயலலிதா.

 50 ஆண்டுகளுக்கும் மேலாக இதே எம்ஜிஆர் , ஜெயலலிதாவை எதிர்த்து மிக மோசமாக திமுக மேடையில் விமர்சித்து வந்தவன் நான் ஆனால் சொந்தமாக ஒரு வாகனம் கூட இல்லை பேருந்தில் தான் எனது பயணம், ஒரே முறைதான் ஜெயலலிதாவை சந்தித்தேன் என் வாழ்க்கையே தலைகீழாக மாறியது, பேருந்தை மட்டுமே பார்த்த நான் இன்று டாட்டா சுமோவில் போகிறேன், வாகனம் மட்டுமல்ல  வருமானத்துக்கும் வழி செய்தார் அம்மா என நெஞ்சுருக கூறியுள்ளார் தீப்பொறி ஆறுமுகம். 

iron lady-jayalalitha

இதேபோல் திமுக விசுவாசியான ராதாரவி மேடையில் கடுமையாக ஜெயலலிதாவை விமர்சித்தவர் , அவரது வீடு ஏலம் போகும் நிலையில் அதை மீட்டெடுத்து உதவியதால் அதிமுக விசுவாசியானார். சமீபத்திய உதாரணம் நாஞ்சில் சம்பத். 

ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்த தமிழகத்தின் உச்ச நடிகருக்கும் சொந்த மகளாலேயே பிரச்சனை வந்த போது உடனடியாக அவர் ஜெயலலிதா உதவியை கேட்க எதிரி என்றும் பாராமல் உதவினார் ஜெயலலிதா. இன்றும் அதற்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறார் அந்த உச்ச நடிகர். 

இது போன்ற பல உதாரணங்களை கட்சிக்காரர்கள் சொல்கிறார்கள். பகைவனுக்கு அருள்வாய் நெஞ்சே அந்த குணத்தை இயல்பாய் பெற்றவர்கள் எங்கோ தூக்கி வைத்து கொண்டாடப்படுகிறார்கள். இறப்புக்கு பின்னரும் வாழ்கிறார்கள். 

Follow Us:
Download App:
  • android
  • ios