ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பத்தின் ஜாமீன் மனுவை எதிர்த்து சிபிஐ தரப்பில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்துக்கு வெளிநாடுகளில் ரூ.305 கோடி நிதி திரட்ட அனுமதி கொடுத்ததில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும், அவரது மகன் கார்த்தி சிதம்பரமும் முறைகேடுகள் செய்ததாக சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், ஆகஸ்ட் 21-ம் தேதி சிபிஐ அதிகாரிகளால் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு பின்னர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். 

இதில், சிபிஐ தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்து உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆனால், அமலாக்கத்துறை வழக்கு, விசாரணையில் இருப்பதால் அவரால் ஜாமீனில் வெளிவரமுடியாத நிலை இருந்து வந்தது. மேலும், அமலாக்கத்துறை காவல் அக்டோபர் 30-ம் தேதி வரை நீடிக்கப்பட்டது. அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் வழங்க வேண்டும் என ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், உச்சநீதிமன்றம் வழங்கிய ஜாமீனை எதிர்த்து சி.பி.ஐ. அதிகாரிகள் சீராய் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த சீராய் மனு தாக்கல் செய்துள்ளதால் ப.சிதம்பரத்துக்கு பின்னடைவை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.