internet cut in 3 district
தூத்துக்குடியில் இன்றும் துப்பாக்கி சூடு நடை பெற்றதில் ஒருவர் பலியானார் இருவர் படுகாயம் அடைந்தனர். நேற்று நடந்த துப்பாக்கி சூட்டில் 12 பேர் பலியாகியுள்ளனர். இதனால் நிலைமை இன்னும் உச்சகட்ட பதட்டத்தை அடங்கியுள்ளது.
நேற்று ரயில்கள் யாவையும் தடை செய்தனர். அரசு பேருந்து போக்குவரத்தும் முற்றிலுமாக முடங்கியுள்ளது. தற்போது இணையதள சேவையை முடக்கியது அரசு. தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இணைய வசதியை கட் பண்ணியுள்ளது அரசு.

செல்போனிலும் இணையம் செயல்படாது. மறு உத்தரவு வரும்வரை இணையம் முடக்கப்படும் என உத்தரவு. சமூக வலைதளங்கள் மூலமாக மக்கள் ஒன்றுகூடுவதை தடுக்கவும் அங்குள்ள சூழலை ஊடகங்கள் தெரிவிக்காமல் இருக்கவும் அரசு இவ்வகையான முயற்சிகளை எடுத்துவருகிறது.

விரைவில் தொலைபேசிக்கான சிக்னலும் தடைபடும் எனத் தெரிகிறது.
