Asianet News TamilAsianet News Tamil

நீட் தேர்வுக்காக மாணவர்களுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தகவல்.

வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் பட்சத்தில் 50%மாணவர்களை கொண்டு செயல்பட திட்டமிட்டிருக்கிறோம். பள்ளிகள் திறப்பு குறித்து என்ன மாதிரியான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் குறிப்பிட்டிருக்கிறோம்.

Intensive training is being given to the students for NEET examination .. Information of the Minister of School Education.
Author
Chennai, First Published Aug 12, 2021, 11:45 AM IST

நீட் தேர்வுக்கு மாணவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.இந்திய நூலக தந்தை பத்ம ஸ்ரீ எஸ்.ஆர். ரங்கநாதனால் உருவாக்கப்பட்ட சென்னை நூலக சங்கம் 93 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. அவரது 123வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக சென்னை நூலக சங்க நூலகர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. 

Intensive training is being given to the students for NEET examination .. Information of the Minister of School Education.

இந்நிகழ்ச்சியை பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு துவக்கி வைத்து, நூலகர்களுக்கு விருது வழங்கினார்.தொடர்ந்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி: அண்ணா நூற்றாண்டு நூலகம், கன்னிமாரா நூலகம், மதுரையில் வர இருக்கின்ற கலைஞர் நூலகம் என தமிழகத்தில் உள்ள அனைத்து நூலகங்களும் எப்படி செயல்பட வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தி இருக்கிறார். அதன்படி அந்தந்த மாவட்டத்தில் உள்ள நூலகங்களில் கட்டிடங்கள் எந்த நிலையில் இருக்கிறது, எந்த மாதிரியான வசதிகள் தேவை, புத்தகங்கள் எந்தளவிற்கு பாதுகாக்கப்பட்டு வருகிறது என கேட்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

Intensive training is being given to the students for NEET examination .. Information of the Minister of School Education.

வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் பட்சத்தில் 50%மாணவர்களை கொண்டு செயல்பட திட்டமிட்டிருக்கிறோம். பள்ளிகள் திறப்பு குறித்து என்ன மாதிரியான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் குறிப்பிட்டிருக்கிறோம். நீட் தேர்வுக்கு தொடர்ந்து பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடம் சம்பந்தமாக பயிற்சிகள் கொடுக்கப்படுகிறது. தமிழக அரசை பொறுத்தவரை நீட் வேண்டாம் என்பது தான் நிலைப்பாடு என்றார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios