Asianet News TamilAsianet News Tamil

நாட் ரீச்சபிள் ஆன அமைச்சர்கள்... உளவுத்துறை மூலம் வலை வீசிய முதல்வர்... ஸ்லீப்பர் செல்களை களையெடுக்க பிளான்!?

Intelligence shocking report on Minister and MLA
Intelligence shocking report on Minister and MLA
Author
First Published Dec 26, 2017, 8:20 AM IST


ஆர்.கே.நகர் மக்களை ஏமாற்றி, ஜெயிச்சா காசு தரோம்னு கடன் சொல்லி வோட்டு வாங்கி தினகரன் ஜெயிச்சிருக்காரு இதை ஏத்துக்க முடியாது, போதாதுக்கு திமுகவோடு கூட்டு சேர்ந்து நம்மள அழிக்க பிளான் போட்டுட்டாரு தினகரன். ஆனால், அவரோட பிளான்  அதிமுகவை எந்த விதத்திலும் பாதிக்காது என முதல்வர் பழனிசாமி துணைமுதல்வர் பன்னீர்செல்வம் அறிக்கையே வெளியிட்டுட்டாங்க, அறிக்கை மட்டும் பத்தாதுன்னு  நேற்று அவசர அவசரமா கட்சியோட உயர்மட்டக்குழுவின் கூட்டம் போட்டுட்டாங்க... 

Intelligence shocking report on Minister and MLA

நேற்று நடந்த அவசர கூட்டம் தினகரன் ஜெயிச்சதுக்காக இல்ல  அப்புறம் என்னதான் காரணம்? வாக்கு என்னும் நாளில் எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே செம அப்செட்டில் இருந்திருக்கிறார் முதல்வர் பழனிசாமி... ஆனால்,ஆதரவாளர்களோ, ‘இது முதல் ரவுண்டு தான்...அடுத்து வர்றதுல பாருங்க... நாம லீடிங்க்ல வந்துடுவோம்..’ என அவருக்கு மழுப்பலாக சமாதானம் கூல் செய்துள்ளார்களாம். ஆனால், மதியம் 10 ரௌண்டு முடிஞ்சதும் டென்ஷானின் உச்சத்துக்கே போய்விட்டாராம் முதல்வர், ‘இதுக்கு மேலயும் என்னை நம்பச் சொல்றீங்களா?’ என கோபப்பட்டாராம்.

இதனையடுத்து அமைச்சர் ஒருவருக்கு போன் கால் போடச் சொல்லி இருக்கிறார். ஆனால், அவரது நம்பர் நாட் ரீச்சபிள் மோடில் இருந்ததாம்... அடுத்ததா எம்.எல்.ஏ.க்களுக்கும் போன் போடச் சொன்னாராம்... அதில் சிலரது எண்கள் ஆஃப் செய்யப்பட்டிருந்ததாம். சிலர் போனை எடுக்கவில்லை. ‘அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் எல்லாம் எங்கே போயிருக்காங்க அவங்களோட அடுத்த மூவ் என்னன்னு செக் பண்ணுங்க... செல் ஆஃப் பண்ணி வெச்சிருக்கிறவங்களும் எங்கே இருக்காங்கன்னு செக் பண்ணுங்க...’ என  உளவுத் துறையில் உள்ள அதிகாரியை தொடர்பு கொண்டு பேசியுள்ளார் முதல்வர்.

Intelligence shocking report on Minister and MLA

அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் என ஒவ்வொருவரின் மூவரும் வாட்ச் பண்ண ஆரம்பித்தது உளவுத் துறை. இதனையடுத்து முதல்வரை தொடர்பு கொண்ட உளவுத் துறை சொன்ன சில தகவல்களை கேட்டு ஆட்டம் கட்டுவிட்டதாம் முதல்வருக்கு. 

அது என்னன்னா? அமைச்சர்கள் சிலர் நேற்று தினகரனைத் தொடர்பு கொண்டு வாழ்த்துச் சொல்லியதையும், அதேபோல எம்.எல்.ஏ.க்கள் சிலரும் தினகரனைத் தொடர்பு கொண்டு பேசிய தகவலாம். ஆனால் இதுவரை  அமைச்சர்களோ, எம்.எல்.ஏ.க்களோ யாரும் தினகரனை நேரில் சென்று சந்திக்கவில்லை என்பதும் முதல்வருக்கு ஆறுதல் செய்தி. ஆனாலும் அமைச்சர்களையும், எம்.எல்.ஏக்களையும் தொடர்ந்து கண்காணிக்க முதல்வரின் அடுத்த அசைன்மென்ட்டாம். அப்படி உளவுத் துறை கண்காணிக்கத் தொடங்கியதில் சில அதிர்ச்சி விஷயங்கள் சிக்கியிருக்கிறதாம்...

Intelligence shocking report on Minister and MLA

அது என்னன்னா? 5 அமைச்சர்களின் உதவியாளர்கள் தினகரன் வீட்டுக்குப் சென்று பொக்கே கொடுத்திருக்கிறார்கள் . ‘அமைச்சர் வாழ்த்துச் சொல்லச் சொன்னாரு.... அவரே உங்களோடு பேசுவாரு...’ என்றும் சொல்லிவிட்டு வந்திருக்கிறார்கள். இந்தத் தகவல்களும் முதல்வருக்குப் போயிருக்கிறது. அதில் ரொம்பவே அப்செட்டாம்...

Follow Us:
Download App:
  • android
  • ios