கருத்துக் கணிப்புகள் வெளியாகி குழப்பத்தை ஏற்படுத்தி வந்த நிலையில் இன்னும் தேர்தலுக்கு இரு நாட்களே உள்ள நிலையில் இறுதிக்கட்டத்தில் எந்தக் கட்சி எத்தனை தொகுதிகளில் வெல்லும் என மத்திய உளவுத்துறை பைனல் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

ஏற்கெனவே பல ஊடங்கங்களும், அமைப்புகளும் கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளன. அதன்படி

லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் மற்றும் பண்பாடு மக்கள்  தொடர்பகம்:-

திமுக கூட்டணி: 27 - 33 தொகுதிகள்

அதிமுக கூட்டணி: 2 - 5 தொகுதிகள்

அமமுக கூட்டணி: 1 - 2 தொகுதிகள்

தந்தி  டிவி:-

திமுக கூட்டணி: 28 இடங்கள்

அதிமுக: 12 இடங்கள்

புதிய தலைமுறை:-

திமுக கூட்டணி: 31 - 33 இடங்கள்

அதிமுக கூட்டணி: 6  -  8 இடங்கள்

டைம்ஸ் நவ்:- 
திமுக-காங்கிரஸ் கூட்டணி 33 தொகுதிககள்

அதிமுக பாஜக- கூட்டணி- 6 தொகுதிகள்

என ஊடக நிறுவனங்கள் கருத்துக் கணிப்பை முன்னுக்குப்பின் முரணாக தெரிவித்து இருந்தன. தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் இறுதிக்கட்டமாக மத்திய உளவுத்துறை தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் யார் வெற்றி பெறுவார்கள் என்கிற அறிக்கையை சமர்பித்துள்ளது. அதன்படி  திமுக- காங்கிரஸ் கூட்டணி 27 இடங்களையும், அதிமுக - பாஜக கூட்டணி 12 இடங்களிலும் வெல்லும் என கூறப்பட்டுள்ளது. அந்த 12 தொகுதிகளில் பாஜக 2 இடங்களையும், தேமுதிக 1 இடத்திலும் வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆக மொத்தம் அதிமுக தனித்து 9ன் சீட்டுக்களை மட்டுமே பிடிக்கும் என கூறியுள்ளது.