இளம்பெண்ணுடன் போலீஸ் ஜீப்பில் ஜாலியாக உல்லாசமாக வலம் வந்த இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.இந்த சம்பவம் கேரளாவில் பரபபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கவிகோத்தகிரி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சினு.இவர் 25 வயது இளம் சிட்டுடன் ஜாலியாக அரசாங்கம் பாதுகாப்பு பணிக்காக கொடுத்த ஜீப்பில் குறிப்பிட்ட பகுதியில் உல்லாசமாக உலா வந்திருக்கிறார். நீண்ட நேரமாக அந்த பெண்ணுடன் பேசி அரட்டை அடித்த இன்ஸ்பெக்டர். தன் வாகன ஓட்டியான செரீனிடம் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு ஜீப்பை ஓட்டச்சொல்ல அவரும் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு போய் நிறுத்தியிருக்கிறார். அங்கே இளம்பெண்ணுடன் நெருக்கமாக அவர்கள் குலைய குலைய பேசியதை ஒருவன் வீடியோ எடுத்து கண்ணூர் டிஎஸ்பி பிரேம்ராஜனுக்கு.. 'உங்கள் இன்ஸ்பெக்டர் என்ன வேலை பார்க்கிறார் பாருங்கள்' என்று அனுப்பி வைத்ததும் ஆடிப்போனாராம் அந்த இன்ஸ்.இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த கூடுதல்டிஎஸ்பி பிரஜிவிக்கு அனுப்பி வைத்தார் டிஎஸ்பி. விசாரணையில் இன்ஸ்பெக்டர் சினு இளம் பெண்ணுடன் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்றது உறுதிசெய்யப்பட்டது.இதையெடுத்து இன்ஸ்பெக்டர் சினு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.