Asianet News TamilAsianet News Tamil

ஊரக உள்ளாட்சி மறைமுக தேர்தல்... வெற்றி பெற்றவர்கள் முழுவிவரம்..!

மறைமுக தேர்தல் முடிவில் மொத்தமுள்ள 27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளில் இதுவரை அதிமுக 14 மாவட்டங்களிலும், திமுக 12 மாவட்டங்களிலும் கைப்பற்றியுள்ளது. ஒன்றிய தலைவர் பதிவியில் 314 இடங்களில் இதுவரை அதிமுக 149, திமுக 135 இடங்களிலும் வென்றுள்ளது. 

indirect local body election results...Winners details
Author
Coimbatore, First Published Jan 11, 2020, 2:50 PM IST

மறைமுக தேர்தல் முடிவில் மொத்தமுள்ள 27 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளில் இதுவரை அதிமுக 14 மாவட்டங்களிலும், திமுக 12 மாவட்டங்களிலும் கைப்பற்றியுள்ளது. ஒன்றிய தலைவர் பதிவியில் 314 இடங்களில் இதுவரை அதிமுக 149, திமுக 135 இடங்களிலும் வென்றுள்ளது. 

வெற்றி பெற்றவர்களின் முழுவிவரம்;- 

* தேனி மாவட்ட ஊராட்சித் தலைவராக அதிமுகவை சேர்ந்த பிரீத்தா தேர்வு செய்யப்பட்டார். 

* அரியலூர் மாவட்ட ஊராட்சித் தலைவராக அதிமுகவை சேர்ந்த சந்திரசேகர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். 

* கரூர் மாவட்ட ஊராட்சித் தலைவராக அதிமுகவை சேர்ந்த எம்.எஸ்.கண்ணதாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

* கரூர் தான்தோன்றி ஒன்றியக் குழு தலைவராக அதிமுகவை சேர்ந்த சிவகாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

* கரூர் க.பரமத்தி ஒன்றிய குழுத் தலைவராக அதிமுகவின் மார்க்கண்டேயன் தேர்வு.

* கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றியக் குழு தலைவராக அதிமுகவை சேர்ந்த வள்ளியாத்தாள் குருசாமி தேர்வு.

* கரூர் ஒன்றியத் தலைவராக அதிமுகவை சேர்ந்த பாலமுருகன் தேர்வு.  

* கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றியக் குழு தலைவராக அதிமுகவை சேர்ந்த வள்ளியாத்தாள் குருசாமி தேர்வு.

* கரூர் ஒன்றியத் தலைவராக அதிமுகவை சேர்ந்த பாலமுருகன் தேர்வு. 

* திருச்சி மாவட்டம், முசிறி தா.பேட்டை ஒன்றியக் குழுத் தலைவராக திமுகவைச் சேர்ந்த ஷர்மிளா போட்டியின்றி தேர்வு. 

* நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றிய சேர்மேனாக அதிமுகவின் தங்கம்மாள் தேர்வு.

* பெரம்பலூர் மாவட்ட ஊராட்சித் தலைவராக திமுகவை சேர்ந்த ராஜேந்திரன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். 

* தஞ்சை மாவட்டம், ஊராட்சி குழுத் தலைவராக திமுகவை சேர்ந்த உஷா போட்டியின்றி தேர்வு. 

* தேனி மாவட்டம், கம்பம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவராக அதிமுகவை சேர்ந்த பழனிமணி தேர்வு.

* கடலூர் மாவட்டம், விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய தலைவராக அதிமுகவை சேர்ந்த செல்லத்துரை தேர்வு.

* திருப்பூர் மாவட்டம், காங்கேயம் ஒன்றியக் குழுத் 10- வது வார்டு தலைவராக சுயேச்சை வேட்பாளர் மகேஷ் வெற்றி. 

* திருவள்ளூர் மாவட்டம், புழல் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவராக திமுகவை சேர்ந்த தங்கமணி போட்டியின்றி தேர்வு. 

* திருச்சி மாவட்டம், மணப்பாறை ஒன்றியம் 14- வது வார்டில் திமுகவை சேர்ந்த அமிர்தவள்ளி போட்டியின்றி தேர்வு. 

* அவிநாசி ஊராட்சி ஒன்றிய தலைவராக அதிமுகவை சேர்ந்த ஜெகதீசன் வெற்றி. 

* கோவை மாவட்டம், காரமடை ஊராட்சி  ஒன்றியக் குழுத் தலைவராக அதிமுகவை சேர்ந்த மணிமேகலை மகேந்திரன் தேர்வு. 

* கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை ஒன்றியத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கும், பாஜக கூட்டணிக்கும் தலா 5 இடங்கள் கிடைத்திருந்ததால் குலுக்கல் முறையில் தலைவர் தேர்வு நடைபெற்றது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் அருள் ஆண்டனி வெற்றி. 

* நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய சேர்மனாக திமுகவைச் சேர்ந்த ஜெகநாதன் தேர்வு. 

* செய்யாறு வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் அதிமுகவை சேர்ந்த ராஜி ஒருமனதாக தேர்வு. 

* தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி தலைவராக திமுகவை சேர்ந்த வசுமதி அம்பா சங்கர் போட்டியின்றி தேர்வு.

* தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் ஒன்றியக்குழு தலைவராக அதிமுகவைச் சேர்ந்த வசந்தா போட்டியின்றி தேர்வு.

* கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய 9- வது வார்டில் அதிமுகவின் நர்மதா துரைசாமி தேர்வு.

* நாகை மாவட்டம், வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவராக அதிமுகவின் கமலா அன்பழகன் தேர்வு.

* சேலம் மாவட்டம், வாழப்பாடி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவராக அதிமுகவை சேர்ந்த சதீஷ்குமார் போட்டியின்றி தேர்வு. 

* திருவாரூர் மாவட்ட ஊராட்சித் தலைவராக திமுகவை சேர்ந்த பாலசுப்பிரமணியன் வெற்றி. 

* கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் ஒன்றிய குழு தலைவராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கிறிஸ்டல் ரமணிபாய் தேர்வு. 

* சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவராக திமுகவை சேர்ந்த சண்முக வடிவேல் தேர்வு. 

* திருச்சி மாவட்டம், மணப்பாறை ஒன்றியம் 14- வது வார்டில் திமுகவைச் சேர்ந்த அமிர்தவள்ளி போட்டியின்றி தேர்வு. 

* திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி ஒன்றிய குழு தலைவராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பாஸ்கர் தேர்வு. 

* கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியக்குழு தலைவராக அதிமுகவை சேர்ந்த லதா வெற்றி. 

* கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் ஒன்றியக்குழு தலைவராக திமுகவின் சர்புதீன் பர்வீன் வெற்றி. 

* கோவை மாவட்டம், சூலூர் ஒன்றிய குழு தலைவராக அதிமுகவை சேர்ந்த பாலசுந்தரம் வெற்றி. 

* நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய சேர்மனாக அதிமுகவை சேர்ந்த ராஜேந்திரன் தேர்வு. 

* சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஊராட்சி ஒன்றிய குழு தலைவராக அதிமுகவை சேர்ந்த முனியாண்டி தேர்வு. 

* விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தலைவர் தேர்தலில் திமுகவின் சசிகலா பொன்ராஜ் தேர்வு. 

* ஈரோடு மாவட்டம், பவானி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவராக அதிமுகவின் பூங்கோதை வரதராஜன் தேர்வு. 

* திருவாரூர் மாவட்டம், குடவாசல் ஒன்றியக் குழு தலைவராக அதிமுகவை சேர்ந்த கிளாரா போட்டியின்றி தேர்வு.

* சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே காடையாம்பட்டி ஒன்றியக்குழு தலைவராக அதிமுகவின் மாரியம்மாள் வெற்றி. 

* நீலகிரி மாவட்ட ஊராட்சி தலைவராக திமுகவின் பான்தோஸ் தேர்வு செய்யபட்டார். தமிழகத்தில் முதன்முறையாக தோடர் பழங்குடியினர் சமுதாயத்திலிருந்து தலைவராக பதவி ஏற்றார். மொத்தம் உள்ள 6 உறுப்பினர்களில் 5 பேர் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

* புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியில் மறைமுக தேர்தல் மையத்தில் ஏராளமானோர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கலைந்து செல்ல மறுத்து வாக்குவாதம் செய்ததால் போலீசார் தடியடி நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

* சேலம் மாவட்டம் தாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதால் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்து உள்ளனர்.

* சேலம் மாவட்டத்தில் உள்ள 20 ஊராட்சி ஒன்றியங்களில் 16 இடங்களில் ஒன்றியக்குழு தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றுகிறது. மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் பதவியும் அதிமுகவின் வசமாகிறது.

* சேலம் மாவட்டத்தில், மாவட்ட ஊராட்சிக்கான 29 வார்டுகளுக்கு நடைபெற்ற தேர்தலில், அதிமுக 18 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சிகள் 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

Follow Us:
Download App:
  • android
  • ios