எங்களுடைய சிக்கலை உணர்ந்துகொண்ட ப. சிதம்பரம், தன்னுடைய மகன் கார்த்தி சிதம்பரம் நடத்திவரும் வர்த்தகத்துக்கு கைமாறாக உதவி செய்யுமாறு கேட்டுக்கொண்டார். இதுதொடர்பாக டெல்லி நட்சத்திர ஓட்டல் ஒன்றில் கார்த்தி சிதம்பரத்தை சந்தித்தோம்.
முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ள ஐஎன்.எக்ஸ். மீடியா வழக்கில் அப்ரூவரான இந்திராணி முகர்ஜி, அவருடைய கணவர் பீட்டர் முகர்ஜியின் வாக்குமூலங்கள் வெளியாகி உள்ளன. 
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முறைகேடு நடந்ததாக சிபிஐ தொடர்ந்து வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் மேலும் 4 நாட்கள் விசாரணை நடத்த சிபிஐ நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் ப. சிதம்பரம் கைதாக காரணமான தொழிலதிபர் பீட்டர் முகர்ஜி, அவருடைய மனைவி இந்திராணி முகர்ஜி ஆகியோர் அளித்த வாக்குமூலங்கள் வெளியாகி உள்ளன. தற்போது அவர்கள் இருவரும் ஷீனா போரா கொலை வழக்கில் சிறையில் உள்ள நிலையில், அவர்கள் அளித்த வாக்குமூலங்கள் வெளியாகி உள்ளன.

இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையிடம் இந்திராணி முகர்ஜி அளித்த வாக்குமூலத்தில், “ நாங்கள் தொடங்கிய ஐ.என்.எக்ஸ் நிறுவனத்துக்கு அன்னிய முதலீடு வாரியத்தின் ஒப்புதலை பெற சிக்கல் இருந்தது. எனவே 2008-ம் ஆண்டு நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தை அணுக பீட்டர் முடிவு செய்தார். அந்த அடிப்படையில்தான் சிதம்பரத்தை இருவரும் சந்தித்தோம். 
எங்களுடைய சிக்கலை உணர்ந்துகொண்ட ப. சிதம்பரம், தன்னுடைய மகன் கார்த்தி சிதம்பரம் நடத்திவரும் வர்த்தகத்துக்கு கைமாறாக உதவி செய்யுமாறு கேட்டுக்கொண்டார். இதுதொடர்பாக டெல்லி நட்சத்திர ஓட்டல் ஒன்றில் கார்த்தி சிதம்பரத்தை சந்தித்தோம். இந்த விஷயத்தை ஏற்கனவே அறிந்து வைத்திருந்த கார்த்தி சிதம்பரம், எங்கள் நிறுவனத்தின் அனுமதிக்கு பிரதி உபகாரமாக 10 லட்சம் அமெரிக்க டாலரை கேட்டார். அவ்வளவு தொகை சாத்தியமில்லை என்று பீட்டர் மறுத்தார்.
