Asianet News TamilAsianet News Tamil

வீழ்ச்சியை நோக்கி பயணிக்கும் இந்திய பொருளாதாரம்...!! ஆய்வு நிறுவனத்தின் அதிர்ச்சி தரும் புள்ளி விவரம்..!!

2021 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு -5 சதவீதமாக வீழ்ச்சியடையும் என்று கோல்ட்மேன் சாச்ஸ் என்ற ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது .  இந்தியாவில் கொரோனா தொற்று பரவலின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துவிட்டது .  

Indian economy going down and 2021 GDP growth to be -5
Author
Delhi, First Published May 21, 2020, 7:17 PM IST

2021 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு -5 சதவீதமாக வீழ்ச்சியடையும் என்று கோல்ட்மேன் சாச்ஸ் என்ற ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது .  இந்தியாவில் கொரோனா தொற்று பரவலின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துவிட்டது .   இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3  ஆயிரத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது ,  வைரஸ் தொற்றை கட்டுப்பாட்டுக்குள்  கொண்டுவர நான்காவது முறையாக மே-31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது . மாநிலங்களின் நிலைமைக்கு ஏற்ப ஆங்காங்கே தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் முழுமையாக செயல்பாட்டுக்கு வரவில்லை. 

Indian economy going down and 2021 GDP growth to be -5

பெரும்பாலான  தொழிற்சாலைகளுக்கு மூலதனப் பொருட்கள் இல்லை எனவே பழையபடி 100 சதவிகிதம் தொழில்கள் நடைபெற இன்னும் , சில மாதங்கள் ஆகும் என்பதே யதார்த்தமாக உள்ளது இந்நிலையில் 2020-21 நிதியாண்டின் ஜூன் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி மைனஸ் 45% என்ற அளவிற்கு சரிவை சந்திக்கும் என்று கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் கூறியுள்ளது .   ஏப்ரல்-ஜூன் காலாண்டில் -20 சதவீதமாகவும் முதல் நிதியாண்டில் -4 சதவிகிதமாகவும் ஜிடிபி வளர்ச்சி இருக்கும் என்று சாச்ஸ் மதிப்பிட்டிருந்தது ஆனால் தற்போது கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் தனது மதிப்பீட்டை குறைத்துள்ளது . 

Indian economy going down and 2021 GDP growth to be -5

நடப்பு நிதியாண்டின் முடிவில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு -5 சதவீதம் வளர்ச்சியை பெறும் என்று தெரிவித்துள்ளது . செப்டம்பர் மாதத்திற்குப் பின்னர் ஜிடிபி  வளர்ச்சி காண வாய்ப்பு இருப்பதாக கூறும் கோல்ட்மேன் சாச்ஸ் 2021 ஆம்  நிதியாண்டில் டிசம்பர் காலாண்டு 14% மார்ச் காலாண்டில் 6.5% என்று இந்த வளர்ச்சி இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக கூறியுள்ளது .  மேலும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் ரூபாய் 20 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதார ஊக்குவிப்பு திட்டங்கள் உடனடியாக பொருளாதாரத்தில் எதிரொலிக்காது என்று தெரிவித்துள்ள கோல்ட்மேன் சாச்ஸ் ,  உலக வங்கி கணக்கின்படி மொத்த ஜிடிபி விகிதத்தில் 10 சதவிகிதம்தான் ஊக்குவிப்பு சலுகையாக அறிவிக்கப்பட்டுள்ளது இது எந்த அளவுக்கு கைகொடுக்கும் என தெரியவில்லை என்று கூறியுள்ளது .

 

Follow Us:
Download App:
  • android
  • ios