நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் ஜிடிபி 5 சதவீதமாக இருந்த நிலையில் அதைக்காட்டிலும் மோசமாக 4.5 சதவீதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த 26 காலாண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜிடிபி வீழ்ச்சி கண்டுள்ளது 

கடந்த 2018-19-ம் நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் நாட்டின் ஜிடிபி 7 சதவீதமாக இருந்தநிலையில் நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் 4.3 சதவீதமாக சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
கடந்த ஆண்டு இதே 2-வது காலாண்டில் 7 சதவீதமாக ஜிடிபி இருந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் 4.5 சதவீதமாக வீழ்ச்சி அடந்துள்ளது. 

ஏறக்குறைய பாதி வளர்ச்சியைக் காணவில்லை. கடந்த 2012-13-ம் ஆண்டில் மார்ச் காலாண்டில் ஜிடிபி 4.3 சதவீதமாக இருந்தது அதற்கு இணையாக தற்போது வந்துள்ளது


நுகர்வோர் செலவு செய்யும் அளவு குறைந்திருப்பது, தனியார் முதலீடு குறைவு, வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு, தொழில்துறை உற்பத்தி சரிவு, ஏற்றுமதி குறைந்தது போன்றவை பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்

தேசிய புள்ளியியல் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி, “ 8 முக்கியத்துறைகளி்ன் உற்பத்தி 5.8 சதவீதமாக நடப்பு நிதியாண்டின் 2-வது காலாண்டில் குறைந்துள்ளது. வேளாண்துறையில் உற்பத்தி கடந்த ஆண்டு 2-வது காலாண்டில் 4.9 சதவீதம் இருந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் 2-வது காலாண்டில் 2.1 சதவீதமாகச் சரிந்துள்ளது


கட்டுமானத்துறையின் வளர்ச்சி கடந்த ஆண்டு 2-வது காலாண்டில் 8.5 சதவீதம் இருந்தநிலையில், நடப்பு நிதியாண்டின் 2-வது காலண்டில் 3.3 சதவீதமாகக் குறைந்துள்ளது. சுரங்கத்துறையில் உற்பத்தி கடந்த ஆண்டு 2.2 சதவீதம் இருந்த நிலையில் 0.1 சதவீதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 5 சதவீதமாகக் குறைந்தவுடன் ரிசர்வ் வங்கி நாட்டின் நடப்பு நிதியாண்டின் பொருளாதார வளர்ச்சியை 6.9 சதவீதத்தில் இருந்து 6.1 சதவீதமாகக் குறையும் எனக் கணித்தது. 

அடுத்த மாதம் தொடக்கத்தி்ல ரிசர்வ் வங்கி நிதிக்கொள்கைக் கூட்டத்தில் இந்த பொருளாதார வளர்ச்சிக் கணிப்பை மேலும் குறைக்க வாய்ப்புள்ளது.
நாட்டில்நிலவும் பொருளாதார மந்தநிலையை சீரமைக்க ஏராளமான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துவருகிறது. 

அதன் ஒருபகுதியாக ரிசர்வ் வங்கியும் கடனுக்கான வட்டி வீதத்தை கடந்த இதுவரை 135 புள்ளிகள் வரை குறைத்துவிட்டது. இது கடந்த 2009-ம் ஆண்டு இருந்த வட்டிவீதத்துக்கு இணையாகக் கொண்டுவந்துவிட்டது.vvv