இந்தியவிமானங்கள் மிக மிக  வாலிமையாக உள்ளது என இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மேலும் பலத்தை அதிகரிக்க நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

இந்திய இராணுவம் மற்றும் பாதுகாப்புத்துறையை சீரமைப்பதற்கான நடவடிக்கைகளில் இந்திய பாதுகாப்புத்துறை இறங்கியுள்ளது, அதாவது, இந்திய இராணுவ தளவாட உற்பத்தியில் தனியாரை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது, அத்துடன் போர் விமானங்கள் உற்பத்தியில் சில சீர்திருத்தங்களும் செய்யப்பட உள்ளது, எனவே  அதற்கான ஆலோசனைக்கூட்டம் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்றது அதில் இந்திய விமானப்படை தலைவர் மார்ஷல் பி.எஸ்.தனோவா, இந்திய இராணுவப்படைத் தளபதி பிபின்ராவத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்  

அதில் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்,  இந்திய விமானப்படை மிக மிக வலிமையாக உள்ளது , இந்திய விமானப்படை தொழில்நுட்ப ரீதியாக முன்னேறி உள்ளது என்றார்.புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிரான  இந்தியா நாடத்திய தாக்குதல் மூலம், இந்தியாவின்  ஆயுத வலிமை என்ன என்பது  உணர்த்தப்பட்டுள்ளது என்றார். இப்போது  இந்தியாவை உரசினால் இந்தியாவின்  ஆயுத பலத்தை பாகிஸ்தான் மீண்டும் அறிய நேரிடும் என்றார். இராணுவ தளவாட  உற்பத்தியில்  கொண்டுவரப்படும் சீர்திருத்தங்கள் மூலம், ஆயுதபலத்தை இன்னும் பன்மடங்கு அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.