இந்தியர்கள் விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதால் தாய்நாடு திரும்ப முடியாமல் அங்கேயே முடங்கி கிடக்கிறார்கள்.அவர்களை இந்தியா கொண்டுவர கொரோனா அச்சம் ஒரு காரணமாக அமைந்திருக்கிறது. இந்த நிலையில் மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் இந்தியர்களை இந்தியா அழைத்து வரவேண்டும் என்று மத்திய அரசிற்கு கோரிக்கை வைத்துள்ளார் ராகுல்காந்தி.

T.Balamurukan
கொரோனா அச்சுறுத்தல் உலகநாடுகளை புரட்டி எடுத்து வரும் வேளையில்,உலக நாடுகளில் இருக்கும் இருக்கும் இந்தியர்கள் விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதால் தாய்நாடு திரும்ப முடியாமல் அங்கேயே முடங்கி கிடக்கிறார்கள்.அவர்களை இந்தியா கொண்டுவர கொரோனா அச்சம் ஒரு காரணமாக அமைந்திருக்கிறது. இந்த நிலையில் மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் இந்தியர்களை இந்தியா அழைத்து வரவேண்டும் என்று மத்திய அரசிற்கு கோரிக்கை வைத்துள்ளார் ராகுல்காந்தி.


காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட் பதிவில்..,
மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா அச்சுறுத்தல் மற்றும் தொழில்கள் முடக்கத்தால் ஆயிரக்கணக்கான இந்திய தொழிலாளர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிஇருக்கின்றனர்.
நாடு திரும்ப விரும்பும் அவர்கள், விமானங்கள் ரத்தால் வர முடியவில்லை. ஆகவே, மத்திய அரசு அவர்களுக்கு விமானங்கள் ஏற்பாடு செய்துதர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred