Asianet News TamilAsianet News Tamil

கடும் பொருளாதார சிக்கலில் இந்தியா ! ரகுராம் ராஜன் எச்சரிக்கை !!

இந்தியப் பொருளாதாரம் சிக்கலில் இருப்பதாக ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார். தற்போதைக்கு இது சீராக வாய்ப்பில்லைஎன்றும் அவர் தெரிவித்துள்ளார்.

india face economic crises
Author
Delhi, First Published Aug 21, 2019, 9:57 AM IST

தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு  பேட்டி அளித்துள்ள அவர், :இந்தியாவின் பொருளாதார மந்தநிலை கவலை அளிக்கிறது. பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.8 சதவிகிதமாக குறைந்து விட்டது. 

கடந்த 2014-ஆம் ஆண்டில் இருந்து இதுதான் குறைந்த அளவாகும். மொத்த உள்நாட்டு உற்பத்தி, 7 சதவிகிதத்துக்கும் குறைவாகவே இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது என தெரிவித்துள்ளார்.

india face economic crises

ஆட்டோமொபைல், ரியல்எஸ்டேட், நுகர்வோர் உற்பத்திநிறுவனங்கள் என எல்லாவற்றிலும் வீழ்ச்சி காணப்படுகிறது. அத்துறையினர் ஊக்கச்சலுகை கேட்கிறார்கள்.இந்த நேரத்தில், பொருளாதாரத்தையும், வளர்ச்சி விகிதத்தையும் அதிகரிக்க புதிய சீர்திருத் தங்கள் கொண்டுவரப்பட வேண்டும். சர்வதேச சந்தையில் கடன்பெறுவது சீர்திருத்தம் அல்ல, அது தந்திர நடவடிக்கையாகவே இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மின்துறை, வங்கிசாரா நிதி நிறுவனங்கள் ஆகியவற்றின் பிரச்சனைகளை உடனடியாக களைய வேண்டும். தனியார் துறையினர் முதலீடு செய்வதைதூண்டும் வகையில் சீர்திருத்தம்இருக்க வேண்டும். 

india face economic crises

தற்போதுள்ள கடினமான சூழ்நிலையில், ஊக்கச்சலுகைகள் நீண்டகால பலன் அளிக்காது.2008-ஆம் ஆண்டை போன்ற பெரிய பொருளாதார வீழ்ச்சி, மீண்டும் ஏற்படாது என்று என்னால் கணிக்க முடியாது. 

india face economic crises

ஆனால்,அப்படி ஏற்பட்டால், அது வேறுகாரணங்களால்தான் ஏற்படும். தற்போதைய பிரச்சனைகளை களைந்தாலும், புதிய பிரச்சனைகள் வருவதை தடுக்க முடியாது என்றும் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios