இந்தியா சிமென்ட்ஸ் 75வது ஆண்டு விழா.. அமித்ஷாவை புகழ்ந்து தள்ளிய இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனர் சீனிவாசன்

சென்னையில் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் 75-வது ஆண்டு விழாவில் மத்திய அமைச்சர் அமித்ஷா, ஆளுநர் ஆர்.என்.ரவி, ஓபிஎஸ், கிரிக்கெட் வீரர் தோனி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 

India Cements live video.. India Cements founder Srinivasan  praised Amit Shah

சென்னையில் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் 75-வது ஆண்டு விழாவில் மத்திய அமைச்சர் அமித்ஷா, ஆளுநர் ஆர்.என்.ரவி, ஓபிஎஸ், கிரிக்கெட் வீரர் தோனி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 75 ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று சென்னை வருகை தந்தார். விமான நிலையத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜகவின் மூத்த நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.

India Cements live video.. India Cements founder Srinivasan  praised Amit Shah

பின்னர், கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஓய்வெடுப்பதற்காக அமித்ஷா தங்கினார்.  இதனையடுத்து, இந்தியா சிமெண்ட்ஸ் 75-வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் அமித்ஷா பங்கேற்றுள்ளார். இதில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மத்ததிய இணை அமைச்சர் எல்.முருகன், அமைச்சர் தங்கம் தென்னரசு, கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கவில்லை. 

இந்த நிகழ்ச்சியில் பேசிய இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன தலைவர் சீனிவாசன்;- ஒரே புள்ளியில் தனது கவனத்தைச் செலுத்தி, வெற்றி பெறுவதில் உறுதியானவர் உள்துறை அமைச்சர் அமித்ஷா என புகழாரம் சூட்டியுள்ளார். சிமெண்ட் உற்பத்தியில் சீனா முதல் இடத்திலும், இந்தியா 2வது இடத்திலும் உள்ளது என சீனிவாசன் கூறியுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios