Asianet News TamilAsianet News Tamil

முதல்வராக இருக்கும்போதே எடப்பாடி பேச்சை கேட்காத பிரதமர் இப்போது கேட்பாரா..? ரெஸ்பான்ஸ் கிடைக்குமா..?

தமிழகத்திற்கான ஆக்சிஜன், மருந்துகளின் தேவையை அதிகரித்து வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
 
Increased supply of oxygen: Edappadi Palanisamy letter to the Prime Minister
Author
Tamil Nadu, First Published May 15, 2021, 4:22 PM IST

தமிழகத்திற்கான ஆக்சிஜன், மருந்துகளின் தேவையை அதிகரித்து வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

Increased supply of oxygen: Edappadi Palanisamy letter to the Prime Minister

தமிழகத்தில் கொரோனாவின் 2வது அலை கடந்த மார்ச் முதல் வேகமாக பரவி வருகிறது. தற்போதைய சூழ்நிலையில் தினசரி பாதிப்பு சுமார் 30 ஆயிரத்தை கடந்து அச்சுறுத்துகிறது. அதேநேரம், தினசரி சுமார் 20 ஆயிரம் பேர் நோயிலிருந்து குணமடைந்து வருகிறார்கள். கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

Increased supply of oxygen: Edappadi Palanisamy letter to the Prime Minister

இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், “தமிழகத்திற்கு ரெம்டெசிவிர் மருந்துகளை கூடுதலாக ஒதுக்க வேண்டும். கொரோனா தடுப்பூசிகளையும் கூடுதலாக வழங்க வேண்டும். ஆக்சிஜன் தேவையை அதிகரித்து வழங்க வேண்டும். தமிழக மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.Increased supply of oxygen: Edappadi Palanisamy letter to the Prime Minister

அதற்கு கருத்து தெரிவித்து வரும் பலரும், ‘’இவர் முதல்வராக இருக்கும்போதே தடுப்பு மருந்துகளை அனுப்பாமல், வெளிநாட்டிற்கு அனுப்பியவர்களா இப்போதுகேட்கப் போகிறார்கள்’’ எனக் கேள்வி எழுப்புகின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios