கடந்த 2 நாட்களுக்கு முன் வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள திமுக பொருளாளர் வீட்டில் தொடங்கிய வருமானவரி சோதனை இன்று மேலும் சூடு பிடித்து உள்ளது.
கடந்த 2 நாட்களுக்கு முன் வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள திமுக பொருளாளர் வீட்டில் தொடங்கிய வருமானவரி சோதனை இன்று மேலும் சூடு பிடித்து உள்ளது.
சோதனையின் போது கிடைத்த சில விவரங்களை வைத்து, துரைமுருகனின் நண்பரான பூஞ்சோலை சொந்தமான வீடு மற்றும் சிமெண்ட் குடவுனில் நடைபெற்ற சோதனையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப் பட்டது

மேலும், துரைமுருகனின் மகனும் வேட்பாளருமான கதிர் ஆனந்த் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான அலுவலகம் மற்றும் கல்லூரியில் மேற்கொண்ட சோதனையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. தேர்தல் நெருங்கும் இந்த தருணத்தில் மக்களுக்கு விநியோகம் செய்ய தான் இந்த பணம் பயன்படுத்தப்பட இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தருணத்தில் மீண்டும் துரைமுருகன் வீட்டில் சோதனை நடத்த அதிரடியாக நுழைந்துள்ளது வருமான வரித்துறை.

வேலூர் தொகுதியில் தேர்தல் நடத்தப்படுமா அல்லது நிறுத்தப்படுமா என்ற சந்தேகம் எழ தொடங்கி உள்ளது. இதற்கிடையில் அமைச்சர் ஜெயக்குமார் இன்னும் இரண்டு நாட்களில் மேலும் பல திமுக புள்ளிகள் சிக்குவார்கள் என பொடி வைத்து பேசி உள்ளது அனைவரின் கவனத்தை ஈர்த்து உள்ளது.
துரைமுருகனோ தேர்தல் நெருங்கும் நேரத்தில் வேண்டுமென்றே கதிர் ஆனந்தின் வெற்றியை திசைதிருப்ப இது போன்று ரெய்டு செய்வதில் ஈடுபடுகின்றனர். இதனால், தேர்தல் வேலைகளை செய்ய முடியாமல் தடுக்கப்படுகிறது என கூறி வழக்கு தொடர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் வேலூரில், துரத்தி துரத்தி திமுகவின் முக்கிய புள்ளிகள் வீட்டில் சோதனை செய்து வருவதால் சத்ய சோதனைக்கு ஆளாகி உள்ளார் துரைமுருகன்
