income tax officials investigate the three important persons

ஜெயா டிவியின் சிஇஓ விவேக், ஜெயலலிதாவிற்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் சிவக்குமார், ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் ஆகிய 3 பேரையும் ஒரே இடத்தில் வைத்து வருமான வரித்துறையினர் அதிரடி கேள்விகளை எழுப்பி வருகின்றனர். 

தமிழகம், புதுச்சேரி, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள சசிகலாவின் உறவினர்களுக்கு சொந்தமான 187 இடங்களில் சுமார் 1800 வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். 

கடந்த 5 நாட்களாக நடைபெற்ற இந்த வருமான வரித்துறையின் சோதனை இன்று தான் நிறைவடைந்தது. 

இதில் ஏராளமான ஆவணங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே இந்த ரெய்டில் ஜெயா டிவியின் சிஇஓ விவேக் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. 

கடந்த 5 நாட்கள் நடைபெற்ற சோதனையில் கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் விவேக்கை விசாரணைக்காக வருமான வரித்துறை அதிகாரிகள் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். 

மேலும் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர் சிவக்குமாரையும் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனையும் வருமான வரித்துறை அதிகாரிகள் அழைத்து சென்றுள்ளனர். 

ஜெயலலிதாவிற்கு நெருக்கமான இந்த 3 பெரும் புள்ளிகளையும் ஒரே இடத்தி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் அதிகாரிகளின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் மூவரும் திணறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.