சாலை ஒப்பந்ததாரர் தியாகராஜன் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் நேற்று முன்தினம் முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், அவரின் தந்தையும், நெடுஞ்சாலை தலைமை பொறியாளராக இருந்து ஓய்வு பெற்றவருமான குருமூர்த்தி வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 

சாலை ஒப்பந்ததாரர் தியாகராஜன் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வருத்துறையினர்  நடத்திய சோதனையில் 22 கிலோ தங்கம் மற்றும் 41 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசின் சாலைப்பணி ஒப்பந்ததாரர் தியாகராஜனின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழக அரசின் சாலைப்பணி ஒப்பந்ததாரராக தியாகராஜன் இருந்து வருகிறார். இவர் மீது வரி ஏய்ப்பு செய்யப்பட்டதாகவும், வருமானத்தை குறைத்து காண்பித்ததாகவும் புகார் ஏழுந்தது. 

இந்த புகாரை அடுத்து, வருமான வரித்துறை அதிகாரிகள், சென்னையில் உள்ள தியாகராஜனின் வீடு மற்றும் அலுவலகங்களில் நேற்று முன்தினம் முதல் சோதனை நடத்தினர்.

 சோதனையில் 22 கிலோ தங்கம் மற்றும் 41 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல்
செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், தியாகராஜனின் தந்தை குருமூர்த்தி வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

குருமூர்த்தி நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

அமைச்சர் விஜயபாஸ்கர், சேகர், ரெட்டி உள்ளிட்டவர்களைத் தொடர்ந்து தியாகராஜனும் வருமான வரித்துறை சோதனைக்கு உட்பட்டுள்ளார்.

இந்த நிலையில், நெடுஞ்சாலைத்துறையில் நடத்தப்பட்ட ஊழல் குறித்து வெளிப்பட வாய்ப்பு இருப்பதாகவும் இதனால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கல் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது நெடுஞ்சாலைத்துறை முதலமைச்சர் வசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.