In uttra predesh the govt windup wakf Board

உத்தரப்பிரதேசத்தில் செயல்பட்டு வந்த சன்னி முஸ்லிம்கள், ஷியாமுஸ்லிம்களுக்கான வக்பு வாரியத்ைத கலைத்து முதல்வர் ஆதித்யநாத் நேற்று திடீர் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து வக்பு வாரிய அமைச்சர் மோசின் ராசா கூறுகையில், “ இந்த இரு வக்புவாரியங்களிலும் ஏராளமான முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, கலைப்பட்டுள்ளது. இதை கலைப்பதற்கு முன் அனைத்து விதமான சட்டரீதியான வழிகளையும் ஆய்வு செய்தபின் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது’’ என தெரிவித்தார்.

உத்தரப்பிரதேசத்தில் 15 ஆண்டுகளுக்குப் பின் பா.ஜனதா ஆட்சியைப் பிடித்துள்ளது. அங்கு முதல்வராக பொறுப்பு ஏற்றுள்ள கோரக்பூர் எம்.பி. யோகி ஆதித்யநாத்பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். சில நடவடிக்கைகள் சர்ச்சைகளையும், வரவேற்பையும் பெற்று வருகிறது.

இந்நிலையில், மாநிலத்தில் செயல்பட்டு வந்த சன்னி முஸ்லிம்கள், ஷியாமுஸ்லிம்களின் வக்பு வாரியங்களில் ஏராளமான முறைகேடுகள் நடப்பதாக முதல்வர் ஆதித்யநாத்துக்கு புகார்கள் வந்தன. இது தொடர்பாக விசாரணை நடத்திய இந்திய வக்பு கவுன்சிலும், முறைகேடுகள் நடப்பதை உறுதி செய்தது.

வக்பு வாரியத்தில் நடக்கும் முறைகேடுகளை கண்டறிய அமைக்கப்பட்ட மத்தியவக்பு கவுன்சில் அமைக்கப்பட்டது. ஜார்கண்ட் வாரியத்தின் தலைவரும், உத்தரப்பிரதேசத்துக்கு பொறுப்பு ஏற்று இருந்த சயத் இஜாஸ் அப்பாஸ் நக்விதலைமையில் விசாரணை நடந்தது.

அந்த குழு சமீபத்தில் முதல்வர் ஆதித்யநாத்திடம் அறிக்கை அளித்தது. அதில் சமாஜ்வாதி அரசில் சர்ச்சைக்குரிய அமைச்சர் ஆசம் கான் தலைமையில் வக்புவாரியம் செயல்பட்டது. அவர் தலைமையில் வக்பு வாரியங்களில் ஏராளமான நிதி முறைகேடுகள், மேலாண்மை குறைபாடுகள், அலுவலகத்தை தவறாக பயன்படுத்தியது போன்றவைகள் நடந்துள்ளன என்பதை கண்டுபிடித்துக் கூறியது.

மேலும், மவுலானா ஜோகர் அலி கல்வி அறக்கட்டளை என ஒன்றை உண்டாக்கி,வக்பு வாரியத்தில் இருந்து நிதியை அந்த அறக்கட்டளைக்கு ஆசம்கான்திருப்பியுள்ளார் என குற்றம்சாட்டப்பட்டது.

இதையடுத்து, சன்னி, ஷியா முஸ்லிம்களுக்கான வக்பு வாரியங்கள் உடனடியாக கலைப்படுவதாக முதல்வர ஆதித்யநாத் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார். மேலும், வக்பு வாரியத்தில் உள்ள அனைத்து நிர்வாகிகளும், அதிகாரிகளும் அலுவலகத்துக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது.