நடுரோட்டில் வேட்டியை கிழித்து மோதிக்கொண்ட பாஜக-இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள்.!அலறியடித்து ஓடிய பொதுமக்கள்

பாஜக நிர்வாகிகளுக்குள் ஏற்பட்ட உட்கட்சி மோதலால் நடுரோட்டில்  வேட்டி,சட்டை கிழிந்துக்கொண்டு இரு தரப்பினரும் மோதிக்கொண்டதால் பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. 

In Tirupur BJP officials clashed in the middle of the road causing a sensation

 பாஜக உட்கட்சி மோதல்

அரசியலில் எதிர்கட்சியினர் ஒருவரை ஒருவர் விமர்சிப்பதும், மோதிக்கொள்வதும் இயல்பானது தான். ஆனால் உட்கட்சிக்குள் நீயா.? நானா என்ற போட்டியில் சட்டை வேட்டியை கிழித்து கொண்டு இருதரப்பும் மோதிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  திருப்பூர் தெற்குமாவட்ட பா.ஜ.க.தலைவராக உள்ளவர் மங்களம் ரவி. இவருக்கும் அதே கட்சியின் மாநில நிர்வாகியான கொங்கு ரமேஷிற்கும் இடையே நீண்ட காலமாக மோதல் இருந்து வந்துள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர்தரக்குறைவாக விமர்சித்து வந்துள்ளனர்.

நீ ஒரு இன்டர்மீடியன்..! ஆடிட்டர் இல்லை.. செய்தி போடுங்கன்னு கெஞ்சவில்லை- மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அண்ணாமலை

நடு ரோட்டில் மோதிக்கொண்ட பாஜக நிர்வாகிகள்

இந்தநிலையில் பாஜக மாநில நிர்வாகியான கொங்கு ரமேஷிற்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் ஈஸ்வரன், அமைப்பு செயலாளர் சங்கர் மற்றும்  நிர்வாகிகள் செயல்பட்டு வந்துள்ளனர். இதற்கிடையே நேற்று காலை  பாரத பிரதமரின் மனதின் குரல் 100 ஆவது நிகழ்ச்சியின்   விழா கொங்கு ரமேஷின் இடத்தில் நடைபெற்றது. இதில் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.  இதனையடுத்து நேற்று இரவு பாஜக மாநில நிர்வாகியான கொங்கு ரமேஷின் கடைக்கு சென்ற பா.ஜ.க. மாவட்ட தலைவர் மங்களம் ரவி தனது ஆதரவாளர்களோடு சேர்ந்து அங்கிருந்த கொங்கு ரமேஷ் மற்றும் இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ஈஸ்வரனை தாக்கியுள்ளார். இதில் பதிலுக்கு அவர்களும் தாக்கியுள்ளனர்.

In Tirupur BJP officials clashed in the middle of the road causing a sensation

மருத்துவமனையில் அனுமதி

இதில் இரண்டு தரப்பினரின் வேட்டி மற்றும் சட்டை கிழிந்தது. இருந்த போதும் இரு தரப்பும் சரமாரியாக ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டனர்.  இதன் காரணமாக சாலையில் சென்று கொண்டிருந்த பொது மக்கள் அதிர்ச்சி அடைந்து ஓட்டம் பிடித்தனர். அப்போது அங்கிருந்த போலீசார் மற்றும் கட்சி நிர்வாகிகள் இரு தரப்பையும் சமாதானம் செய்து பிரிந்து விட்டனர். இதனையடுத்து காயம் அடைந்த இரு தரப்பும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் இரு தரப்பும் மோதிக்கொண்ட காட்சிகள் சமூக வலை தளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்

திமுகவோடு மதிமுகவை இணைக்கனுமா.? முக்கிய முடிவு அறிவித்த வைகோ

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios