Asianet News TamilAsianet News Tamil

சீட்டுக் கட்டாய் சரியும் டி.டி.வி., அணி... ஒரே மாதத்தில் அமமுகவை நிர்மூலமாக்க எடப்பாடி தடாலடி..!

போகிற போக்கைப்பார்த்தால் டி.டி.வி.தினகரனின் அமமுக கட்சி ஒரே மாதத்தில் காலியாகி விடும் என்றே கூறப்படுகிறது. தேர்தல் முடிவுகள் வெளியான 7 நாட்களுக்குள் நான்கு முக்கிய நிர்வாகிகள் அமமுகவை விட்டு விலகி அதிமுகவில் இணைந்து வருகின்றனர். 
 

In the same month, you have to be ready to annihilate your job
Author
Tamil Nadu, First Published May 31, 2019, 4:29 PM IST

போகிற போக்கைப்பார்த்தால் டி.டி.வி.தினகரனின் அமமுக கட்சி ஒரே மாதத்தில் காலியாகி விடும் என்றே கூறப்படுகிறது. தேர்தல் முடிவுகள் வெளியான 7 நாட்களுக்குள் நான்கு முக்கிய நிர்வாகிகள் அமமுகவை விட்டு விலகி அதிமுகவில் இணைந்து வருகின்றனர். In the same month, you have to be ready to annihilate your job

பழமிருக்கும் மரத்தில் மட்டுமே பறவைகள் கூடு கட்டும் என்கிற பழமொழியை அறியாதவர்களா அமமுக நிர்வாகிகள். கிப்ட் பாக்ஸுக்குள் வைரமும் வைடூரியம் இருக்கும் என நம்பி இருந்த நிர்வாகிகளுக்கு தேர்தல் முடிவுகள் அது எம்டி பாக்ஸ் என காட்டி விட்டது. இதனால் பசையுள்ள இலையை நாடி படையெடுக்கத் தொடங்கி விட்டனர். அதன் படி இன்று அமமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.அண்ணாமலை எடப்பாடி பழனிசாமி முன் இன்று தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.

 In the same month, you have to be ready to annihilate your job

நேற்று தங்க. தங்க தமிழ்செல்வனின் தீவிர ஆதரவாளராக இருந்த அருண்குமார் திடீரென அதிமுகவுக்கு தாவினார். அதற்கு முன் அமமுக கழக அமைப்புச் செயலாளரும், தென் மண்டல பொறுப்பாளருமான திருநெல்வேலி மாவட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி.ஆதித்தன் அக்கட்சியிலிருந்து விலகி மீண்டும் அதிமுகவில் இணைந்தார்

.In the same month, you have to be ready to annihilate your job

இது வெறும் முன்னோட்டம்தான்... இனிமேல் தான் கொத்துக் கொத்தாய் அமமுகவில் இருந்து நிர்வாகிகளை இழுத்து வரப்போகிறோம். பல நிர்வாகிகளும் அவர்களேவே நாங்கள் அழைக்காமலே இணைய தயாராகி வருகிறார்கள்’ என்கின்றனர் அதிமுகவினர். அமமுக ஆரம்பித்து எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை கவிழ்க்க திட்டமிட்ட டி.டி.வி.தினகரனை அடியோடு அரசியலை விட்டு துரத்த வேண்டும். உள்ளாட்சி தேர்தலோ, அடுத்து எந்தத் தேர்தல் வந்தாலுமப்போது தினகரன் அரசியல் களத்தில் இருக்கக்கூடாது. அதற்குள் அவரது கட்சியை இருக்கும் இடம் இல்லாமல் சிதைத்து விட வேண்டும் என எடப்பாடி உத்தரவிட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.

 In the same month, you have to be ready to annihilate your job

மோடி அமைச்சரவை உருவாகி விட்டதால் இனி டி.டி.வி.தினகரன் அணிக்கு எதிராக பலமாக காய்நகர்த்தி அவரது கட்சி நிர்வாகிகளை இழுத்து வந்து டி.டி.வி.தினகரனை தனிமைப்படுத்தும் முயற்சிகளை விரைவில் நடத்த உள்ளது அதிமுக. இதனால் டி.டி.வி.தினகரன் கூடாரம் விரைவில் காலியாகப்போகிறது என்கிறார்கள் அதிமுகவினர். 

Follow Us:
Download App:
  • android
  • ios