In the Pondicherry bandh 3 trucks are being held in jail. The police are conducting talks with them
புதுச்சேரியில் பந்த் நடைபெற்று வரும் நிலையில் 3 லாரிகளை சிறைபிடித்து காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தையில் நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரியில் நியமன எம்.எல்.ஏக்கள் பதவிக்கு பாஜகவை சேர்ந்த 3 பேரை மத்திய அரசு நியமித்தது. இதற்கு நாராயணசாமி தலைமையிலான அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது.
நியமன எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகரே பதவி பிரமாணம் செய்து வைப்பது மரபு. ஆனால் ஆளும் கட்சியின் எதிர்ப்பையும் மீறி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பாஜக நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக, தமிழ் அமைப்புகள் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. தமிழக அரசு பேருந்துகல் மற்றும் தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள், டெம்போக்கள் வழக்கம்போல் ஓடுகின்றன.
இந்நிலையில், பேருந்தின் மீது மர்ம நபர்கள் கல்வீசி விட்டு ஓடிவிட்டனர். இதில் பேருந்தின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.
மேலும் பந்த் நடைபெற்று வரும் நிலையில் அரசின் உத்தரவை மீறி இயக்கப்பட்ட 3 லாரிகளை காங்கிரஸ் கட்சியினர் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
