தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்சனை குறித்து சட்டப் பேரவையில் காங்கிரஸ் தலைவர் ராமசாமி கேள்வி எழுப்பினார். 

அவருக்கு பதில் அளித்துப் பேசிய, அமைச்சர் தமிழகத்தில் குடிமராமத்து திட்டம் அற்புதமான திட்டம் எனவும், கரிகால சோழனுக்கு பிறகு முதலமைச்சர்  எடப்பாடி பழனிச்சாமி இத்திட்டத்தை செயல்படுத்தி உள்ளார் என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், அமைச்சர் எஸ் பி வேலுமணி, தமிழகத்தில் குடிநீர் பஞ்சம் என்பதே இல்லை. பற்றாக்குறைதான் என்றார். ஆன்லைனில் புக்கிங் செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்க வெளி மாவட்டங்களில் இருந்து லாரிகள் மூலம் தண்ணீர் எடுத்து அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். 

இயற்கை பொய்த்து போன நிலையிலும் தமிழகம் முழுவதும் தங்கு தடையின்றி தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.