ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது அளவுக்கு மீறி சொத்துகுவித்ததாக அவர் மீது சொத்துகுவிப்பு வழக்கு தொடரப்பட்டது. மேலும் சசிகலா, இளவரசி, சுதாகரன், ஆகியோர் மீதும் வழக்கு தொடரப்பட்டது. 

இதில் முதல் குற்றவாளியாக ஜெயலலிதா சேர்க்கப்பட்டிருந்தார். இதுகுறித்த வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இதை எதிர்த்து ஜெயலலிதா தரப்பில் மேல்முறையீடு செய்யவே 4 பேரும் தண்டனையில் இருந்து தப்பித்தனர். 
அனைவரையும் நீதிமன்றம் விடுத்தலை செய்வதாக அறிவித்தது. ஆனால் கர்நாடக அரசு விடவில்லை. மேலும் மேல் முறையீடு செய்தது. இந்த மேல் முறையீட்டு மனுவில் ஜெயலலிதா உயிரோடு இருக்கும் காலம் வரை தீர்ப்பு வரவில்லை. 

கடந்த ஆண்டு டிசம்பர்  மாதம் 5 தேதி ஜெயலலிதா காலமானார். இதையடுத்து சொத்துகுவிப்பு வழக்கு மீண்டும் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தது. தீர்ப்பு வருவதற்குள் எப்படியாவது முதலமைச்சராக பொறுப்பேற்க வேண்டும் என அனைத்து சதி வேலைகளிலும் சசிகலா ஈடுபட ஆரம்பித்தார். 

ஜெ மறைவிற்கு பிறகு ஒரு மிகப்பெரிய நாடகத்தை மீடியாக்கள் முன்பு அரங்கேற்றினார். மக்கள் விரும்பவில்லை என்று தெரிந்தும் தற்போது இருக்கும் அதிமுக நிர்வாகிகள் ஒப்புதலோடு பொதுச்செயலாளராக பதவியேற்றார். 

பதவியேற்றதும் முதல் நாளே தன்னுடைய எளிமையான தோற்றத்தில் இருந்து ஜெயலலிதா போன்று நடை உடை பாவணை, அனைத்தையும் மாற்றி அவரின் அனைத்து உடமைகளையும் கைப்பற்றி அவருக்கு உரிமையாக்கி கொண்டார். 
இதைதொடர்ந்து, சொத்துகுவிப்பு வழக்கு தீர்ப்பு சசிகலாவின் கண்ணிற்கு தெரிய, முதலமைச்சராக இருந்த பன்னீரை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தார். 

ஆனால் ஜெயலலிதாவிற்கு மட்டுமே அடிமையாக இருந்த பன்னீர் முதன் முதலில் அனைவருக்கும் முன்னுதாரனமாய் சசிகலாவை எதிர்த்து போர்க்கொடி தூக்கினார். 

இதையடுத்து பன்னீரை பாஜக அரசுதான் இயக்குகிறது என்று அனைவருக்கும் சந்தேகம் எழுந்தது. இது தெரிந்தும், பாஜகவை பகைத்து கொள்ளக்கூடாது என முடிவெடுத்த சசிகலா பன்னீரை திமுகவே இயக்குகிறது என பேட்டியளித்தார். 
ஆனாலும் மத்திய அரசு சசிகலாவுக்கு சப்போர்ட் செய்யவில்லை. வந்தது சொத்துகுவிப்பு வழக்கு தீர்ப்பு அளித்தது. சசிகலாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை. மேலும் சுதாகரனுக்கும், இளவரசிக்கும் தான். ஆனால் ஜெயலலிதா இறந்துவிட்டதால் அவரை இந்த வழக்கில் இருந்து விடுவித்தது. 

இதைதொடர்ந்து பெங்களூர் சிறைக்கு சென்ற சசிகலா அடுத்தடுத்து சீராய்வு மனு போட்டு அட்டெம்ப்ட் அடித்தார். அதற்கு உச்சநீதிமன்றம் விடவில்லை. திரும்ப திரும்ப சசிகலா மனுவில் ஃபெயில் போட்டுகொண்டே இருந்தது நீதிமன்றம். 
இந்நிலையில், கடைசியாக எப்படியாவது முட்டி மோதி பார்த்திட வேண்டும் என சசிகலா முடிவெடுத்தார். 3 பேரும் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுவை தாக்கல் செய்தனர். 

அந்த மனுவில் ஜெயலலிதாவை விலக்கியது போல் எங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என கோரியிருந்தனர். ஆனால் அதற்கும் முழுக்கு போட்டது உச்சநீதிமன்றம். மூன்று பேரின் சீராய்வு மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

இதனால் சிறையில் இருந்து வெளியே வந்து விட வேண்டும் என்ற சசிகலாவின்  கனவு தகர்ந்து போனது. மேலும் இனி அவர் சிறையிலேயே தண்டனை காலத்தை கழிக்க வேண்டிய கட்டயத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். 

இதனிடையே ஒபிஎஸ் தரப்பும் எடப்பாடி தரப்பும் ஒன்றாக இணைந்துள்ள நிலையில் சசிகலாவின் மறு சீராய்வு குறித்த மனுவில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என தினகரன் திவாகரன் தரப்பு கோட்டை கட்டி கொண்டிருந்தது. 

மேலும் கட்சி திரும்ப தமது கைக்குள் கொண்டுவந்துவிட வேண்டும் என திட்டமிட்டனர். ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்பால் பலத்த ஆட்டம் கண்டுள்ளனர் மன்னார்குடி கும்பல்...