Asianet News TamilAsianet News Tamil

கெளதமி வீட்டிற்கு பதில் கமல் வீட்டில் தவறாக ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்... அதிரடி விளக்கம்..!

கெளதமி வீட்டிற்கு பதிலாக, கமல் வீட்டில் தவறுதலாக ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதாக சென்னை மாநகராட்சி ஆணையர் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

In reply to Gautamy's house, Kamal's home was wrongly pasted sticker ... Action Description
Author
Tamil Nadu, First Published Mar 28, 2020, 12:49 PM IST

கெளதமி வீட்டிற்கு பதிலாக, கமல் வீட்டில் தவறுதலாக ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதாக சென்னை மாநகராட்சி ஆணையர் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்டதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என்று நடிகர் கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.

In reply to Gautamy's house, Kamal's home was wrongly pasted sticker ... Action Description

மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாக அவரது வீட்டு வாசலில் சென்னை மாநகராட்சி நோட்டீஸ் ஒட்டியது. இதனால் பெரும் சர்ச்சை உருவானது. இந்த தகவல் ஊடகங்களில் வைரல் ஆனது. இதையடுத்து அவரது வீட்டில் ஒட்டியிருந்த நோட்டீஸை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். எனினும், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மாநகராட்சி ஆணையர், தவறுதலாக பட்டியலில் முகவரி இடம் பெற்றுவிட்டதாக கூறினார்.In reply to Gautamy's house, Kamal's home was wrongly pasted sticker ... Action Description

இந்நிலையில், கொரோனா பாதிப்பால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என்று நடிகர் கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: ஆழ்வார்பேட்டை முகவரியில் சில ஆண்டுகளாக வசிக்கவில்லை என்பது அனைவரும் அறிந்ததே. வரும் முன் தடுக்கும் நடவடிக்கையாக 2 வாரங்களாக நானே தனிமைப்படுத்தி கொண்டேன்.

In reply to Gautamy's house, Kamal's home was wrongly pasted sticker ... Action Description

அன்புள்ளம் கொண்ட அனைவருமே அவ்வாறே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். நடிகை கெளதமி வீட்டிற்கு பதிலாக, கமல் வீட்டில் தவறுதலாக ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதாக சென்னை மாநகராட்சி ஆணையர் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

கமல் வீட்டில் வேலை செய்தவர்கள் யாரோ வெளிநாடு சென்று வந்ததால் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. பாஸ்போர்ட் முகவரியை கொண்டு கமல்ஹாசனின் பழைய முகவரியில் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். கமல் அங்கு வசிக்கவில்லை என தெரிந்ததும் கொரோனா நோட்டீஸ் அகற்றப்பட்டது.

Follow Us:
Download App:
  • android
  • ios