தனியார் அமைப்புகள் கொரோனா பாதுகாப்பு மையங்கள் அமைக்க முன்வரலாம் என்றும், அப்படி வருபவர்களுக்கு மாநகராட்சி அனுமதி அளிக்கும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.சென்னை தரமணியில் உள்ள சென்னை பல்கலைக்கழக விடுதியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் சென்னை  மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்   ஆய்வு மேற்கொண்டார்.

(900படுக்கை வசதிகளுடன் உள்ள இந்த முகாமில் முதற்கட்டமாக 250 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன.) பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆணையர் பிரகாஷ்,  காய்ச்சல் சளி இருந்தாலே பொது மக்கள் வீடு வீடாக காய்ச்சல் தடுப்பு  மாநகராட்சி ஊழியர்கள் வரும்போது கூற வேண்டும், இல்லையெனில் அருகில் உள்ள காய்ச்சல் முகாமுக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றார். இறப்பை தவிர்க்க பொது மக்கள் ஒத்துழைப்பு அளித்து முன்கூட்டியே மக்கள் மருத்துவமனையை நாட வேண்டும்  என்ற அவர், பணிக்கு செல்வோர் வசதிக்காக 30 நிரந்தர  கொரோனா பரிசோதனை மையங்கள் ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்தார். 

மருத்துவமனை அல்லாத மற்ற இடங்கள் 14 மையத்தில் 12,600 படுகைகள் தயராக உள்ளது.தற்போது 1710 நிரம்பியுள்ளது, கூடுதலாக 10,000 படுக்கைகள் ஏற்படுத்த உள்ளதாக கூறிய அவர், தனியார் மருத்துவமனைகளும்,  தனியார் அமைப்புகளும், தனியார் ஹோட்டல்களும் கோவிட் பாதுகாப்பு மையங்கள் அமைக்க முன்வரலாம், அவர்களுக்கு மாநகராட்சி அனுமதி அளிக்கும் என தெரிவித்தார். தடுப்பூசி செலுத்தும் பணி வேகமாக நடந்து வருகிறதாக கூறிய அவர், தடுப்பூசி 100 சதவீதம் பாதுகாப்பானது மக்கள் பயன்படுத்த வேண்டும் என்றார்.45 வயதிற்கு மேற்பட்டோர் தடுப்பூசியை முந்தி போட்டுகொள்ள வேண்டும்,மே மாதம் முதல் 18 வயதிற்க்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுகொள்ளலாம் என்றார். 

தடுப்பூசி திருவிழாவை ஒப்பிடும்போது தடுப்பூசி போடும் பனியில் சற்று வேகம் குறைந்துள்ளதாக கூறிய அவர், கபசுர குடிநீரை கொரோனா
கட்டாட்டு பகுதியில் மட்டும் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றார். சென்னையில் 12,533 பேர் வீட்டு கண்காணிப்பில் உள்ளதாகவும் 12,185 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், தடுப்பூசி தட்டுப்பாடு என்பது சென்னையில் ஏற்படாது என்ற அவர் தற்போது வரை 2 லட்சம் தடுப்பூசிகள் சென்னைக்கு  வழங்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் சில நாட்களில் 3 அல்லது 4 லட்சம் தடுப்பூசிகள் சென்னைக்கு தரப்பட உள்ளதாக தெரிவித்தார்.