இந்தியாவில் வெயிலின் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து நிலையில் ஆந்திர மாநிலத்தில் ஒரே நாளில் மட்டும் வெயிலுக்கு 5 பேர் பலியாகியுள்ளனர்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பையண்ணா. இவரது மனைவி சின்னக்கா.  கூலித்தொழிலாளியான இவர் தக்காளி பறிக்கும் வேலையை செய்து வந்தார்.   வழக்கம்போல் நேற்று  தக்காளி பறித்துக்கொண்டிருந்தார். கடுமையான வெயில் வட்டி வதைத்தபோதும் சின்னக்கா வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதைப்பார்த்த சக தொழிலாளிகள் அவரை மீட்டு, சோமலாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சின்னக்கா வரும் வழியிலே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த சோமலா காவல் நிலைய போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் சித்தூர் மாவட்டத்தில் மட்டும் நேற்று ஒரே நாளில் வெயிலுக்கு 5 பேர் பலியாகி உள்ளனர். இவர்கள் அனைவரும் கூலி தொழிலாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.