Asianet News TamilAsianet News Tamil

கல்வி, சுகாதாரம், விவசாயம்.. பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்

important facts in tamilnadu budget
important facts in tamilnadu budget
Author
First Published Mar 15, 2018, 11:34 AM IST


2018-19ம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சரும் துணை முதல்வருமான பன்னீர்செல்வம் தாக்கல் செய்துவருகிறார்.

பட்ஜெட்டின் சில முக்கிய அம்சங்கள்:

* 2018-19 நிதியாண்டில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9%ஆக உயரும் 

* வரும் நிதியாண்டில் 3 லட்சம் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படும் 
 
* நகர்ப்புற வறுமை ஒழிப்பு திட்டத்துக்கு 300 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் 

* சென்னை கிண்டியில் 20 கோடி ரூபாய் மதிப்பில் அம்மா பசுமை பூங்கா அமைக்கப்படும்

* விவசாயிகளுக்கு உதவும் வகையில் உழவன் என்ற செயலி உருவாக்கப்படும்

* 3000 புதிய பேருந்துகள் வாங்கப்படும்

* 10 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருக்கும் 4593 அரசு பேருந்துகள் மாற்றப்படும்

* சுகாதாரத்துறைக்கு 11,638.44 கோடி ரூபாய் ஒதுக்கீடு

* 200 அரசு பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்

* 100 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்

* தஞ்சை பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி விரிவாக்க மையம் உருவாக்கப்படும்

* தமிழ்மொழி விரிவாக்க மையத்திற்கு ஆண்டுதோறும் 2 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்

* தமிழகத்தில்  26 மாவட்டங்களில் கிராமப்புற புத்தாக்கத் திட்டம் ரூ.920 கோடியில் செயல்படுத்தப்படும்

* மாநில பேரிடர் நிவாரண நிதியத்திற்கு ரூ.786 கோடி ஒதுக்கீடு

* ரூ.24 கோடி செலவில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுகள் பொன்னேரி மற்றும் நசரத்பேட்டையில் நிறுவப்படும்

* மகளிர் சுகாதார திட்டத்தில் சானிட்டரி நாப்கின்கள் வழங்க ரூ,60.58 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்

* திருமண உதவி திட்டத்திற்கு ரூ.724 கோடி ஒதுக்கீடு

* ரூ.24 கோடி செலவில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுகள் பொன்னேரி மற்றும் நசரத்பேட்டையில் நிறுவப்படும்

* ராமநாதபுரம் மாவட்டம் குத்துக்கல்லில் 70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மீன் இறங்குதளம்

* 10 லட்சம் ஹெக்டேரில் திருந்திய நெல் சாகுபடி

* நெல் சாகுபடிக்கு ஊக்கத்தொகை 200 கோடி ஒதுக்கீடு

* தரங்கம்பாடி அருகே 220 கோடி ரூபாயில் மீன் பிடி துறைமுகம்

Follow Us:
Download App:
  • android
  • ios