Asianet News TamilAsianet News Tamil

நீ பரோட்டா போட்டால் நான் கொத்து பரோட்டா போடுவேன்... எல்லை தாண்டி அடிக்கும் அதிமுக வேட்பாளர்..!

களத்தில் இறங்கிய சதன் பிரபாகரன், மக்களோடு மக்களாக தெருவில் இறங்கி நடனமாடினார். அடுத்து நீங்கள் ( திமுக) பரோட்டா போட்டால் நான் கொத்துப்பரோட்டா போடுவேன்’ என கொத்துப்பரோட்டா போட்டுக் கொடுத்தார். 

If you put Barota, I will put a bunch of Baroda ... AIADMK candidate hunting for DMK candidate ..!
Author
Tamil Nadu, First Published Mar 26, 2021, 6:09 PM IST

தேர்தல் தேதி நெருங்க, நெருங்க வாக்குச்சேகரிக்கும் வேட்பாளர்களின் வியூங்கங்களும் வியக்க வைக்கின்றன. அதிலும் குறிப்பாக திமுக -அதிமுக வேட்பாளர்கள் பிரச்சாரத்தின் போது மக்களை கவர பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றனர். இந்தத் தேர்தலில் புது யுக்திக்கு வழிவகுத்தவர்   நாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் தங்க.கதிரவன். நாகூர் வண்டிப்பேட்டை பகுதியில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டபோது பெண்மணி ஒருவர் துணி துவைத்துக்கொண்டிருப்பதைப் பார்த்த அவர் அங்கிருந்த துணியைத் துவைத்தவாறே இரட்டை இலைச் சின்னத்தில் வாக்கு அளிக்குமாறு மக்களிடம் வாக்குச் சேகரித்தார். இப்படி தங்க கதிரவன் இந்த வியூகத்தை ஆரம்பித்து வைத்தாலும் தொடர்ந்து அதிரடி காட்டி வருகிறார் பரமக்குடி தொகுதி அதிமுக வேட்பாளர் சதன் பிரபாகரன். If you put Barota, I will put a bunch of Baroda ... AIADMK candidate hunting for DMK candidate ..!

பக்கத்து தொகுதியான மானாமதுரையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழரசி பிரச்சாரத்திற்கு சென்றபோது வயலில் இறங்கி நாற்று நட்டார், பணியாரம் சுட்டார், பரோட்டா போட்டார், ப்ரைடு ரைஸ் தயாரித்தார். அதெற்கெல்லாம் சளைத்தவன் அல்ல என தான் பரமக்குடியில் போட்டியிட்டாலும் பக்கத்து தொகுதி திமுக வேட்பாளருக்கும் ட்ஃப் கொடுக்கும் வகையில் களத்தில் இறங்கிய சதன் பிரபாகர் மக்களோடு மக்களாக தெருவில் இறங்கி நடனமாடினார். அடுத்து நீங்கள் ( திமுக) பரோட்டா போட்டால் நான் கொத்துப்பரோட்டா போடுவேன்’ என கொத்துப்பரோட்டா போட்டுக் கொடுத்தார். மீண்கடையில் மீன் விற்றார். நெசவு தறியை சுற்றினார். இறைச்சி வெட்டிக் கொடுத்தார். டீபோட்டுக் கொடுத்தார். இப்படி யாரும் எதிர்பார்க்காத பல வியூகங்களை விசுக்கென்று செய்து முடித்து விடுக்கிறார். If you put Barota, I will put a bunch of Baroda ... AIADMK candidate hunting for DMK candidate ..!

இதே ஃபார்முலாவை பாஜகவும் பின்பற்ற ஆரம்பித்து இருக்கிறது. புதுச்சேரியில் ஒரு நாள் பயணமாக வந்துள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் காலையில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.  இதனைத்தொடர்ந்து நெல்லித்தோப்பு மற்றும் காமராஜ் நகர் தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர்கள் ஜான்குமார் மற்றும் அவரது மகன் விவிலியன் ரிச்சர்ட் ஆகியோருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவர் இத்தொகுதிகளில் வீதி வீதியாக நடந்து சென்று பொதுமக்களிடம் தாமரை சின்னத்துக்கு வாக்கு கேட்டார்.If you put Barota, I will put a bunch of Baroda ... AIADMK candidate hunting for DMK candidate ..!

அப்போது ஒரு பெண் தலையில் சூடி கொள்ள மல்லிகைப்பூ சரத்தை கொடுத்தார். இதனை மகிழ்வுடன் பெற்று கொண்டு அடுத்த வீட்டுக்கு சென்றபோது அங்கிருந்த பெண்ணுக்கு பூவை சூட்டிய மத்திய அமைச்சரை கூடியிருந்தவர்கள் கைத்தட்டி வரவேற்றனர். டீக்கடையில் டீ குடிப்பது, வடை சாப்பிடுவது, சூப் கடையில சூப் போடுவது, தோசை கடையில் தோசை போடுவது, எல்லாம் தேர்தலின்போது வழக்கமானது. இதனையெல்லாம் தாண்டி புதுப்புது வகைகளில் களமிறங்கி அடித்துவருகிறார் சதன்பிரபாகர்.

Follow Us:
Download App:
  • android
  • ios