திமுக ஏறி அடிக்க துணிந்தால் நாங்களும் ஏறி அடிக்க தயார் என இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபுவுக்கு எச். பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா சவால் விடுத்துள்ளார்.
திமுக ஏறி அடிக்க துணிந்தால் நாங்களும் ஏறி அடிக்க தயார் என இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபுவுக்கு எச். பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா சவால் விடுத்துள்ளார். ஒரு காலத்தில் ஜெயலலிதாவின் காலில் விழுந்து படுத்து கிடந்தவர்ரான் இந்த சேகர்பாபு என்றும் அவர் மதுரை ஆதீனத்திற்கு எதிராக பேசுகிறார், சேகர்பாபு தனது அமைச்சர் பதவிக்கான மரியாதையை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் ராஜா விமர்சித்துள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பாஜக திமுகவுக்கு இடையேயான மோதல் பன்மடங்கு அதிகரித்துள்ளது. அதிலும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை எச். ராஜா போன்றோர் தொடர்ந்து அமைச்சர்களை கடுமையாக விமர்சித்தும் பேசி வருகின்றனர், அதேநேரத்தில் இந்து சமய அறநிலைத்துறையை தொடர்ந்து விமர்சிக்கும் பாஜக தலைவர்கள் இந்து கோவில்களை கட்டிப்பாட்டில் வைத்துக் கொண்டு மீது இந்து மத சாம்பிரதாயங்களில் அறநிலைத்துறை ஆதிக்கம் செலுத்தி வருகிறது, எனவே இந்து சமய அறநிலைத்துறையை கலைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதேபோன்ற கருத்தைதான் மதுரை ஆதீனமும் கூறி வருகிறார். இதனால் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு முதுரை ஆதீனத்தின் அரசியல் பேச்சு எச்சரித்துள்ளதுடன், ஆதீனம் தனது அரசியலை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் அவருக்கு பதில் சொல்ல பல வழிகள் உள்ளது என எச்சரித்துள்ளார்.

அமைச்சர் சேகர் பாபுவின் இந்த பேச்சுக்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக இது குறித்து உசிலம்பட்டியில் செய்தியாளரை சந்தித்து பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச். ராஜா தேசியம் தெய்வீகமும் முக்கியமாக கருதியவர் பொன்.முத்துராமலிங்க தேவர், ஆனால் கடந்த ஓராண்டாக தமிழகத்தில் இந்த இரண்டுக்குமே ஆபத்து வந்துள்ளது. தமிழகத்தில் இந்துக்களுக்கு எதிராக ஒரு மோசமான அரசு நடந்து கொண்டிருக்கிறது. தருமபுர ஆதீன பட்டணப் பிரவேச பிரச்சனையிலிருந்து இந்த அரசின் போக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆதீனங்கள் மற்றும் மடாதிபதி களுக்கு எதிராக சில ரவுடிகளை போல சிலர் நடந்து கொள்கின்றனர்.

அறநிலையத்துறை அமைச்சரின் பேச்சு ஆதீனத்தை மிரட்டும் வகையில் உள்ளது. தூக்கி அடிப்பேன், சும்மா இருக்கேன்னு நினைக்காதீங்க, பதுங்குவது பாய்வதற்கு தான் என அவர் பேசும் பேச்சு அவரின் லட்சணத்தை காட்டுகிறது. அவர் எந்த லட்சத்தில் இருந்தார் என்று எல்லோருக்கும் தெரியும், ஜெயலலிதாவின் காலடியில் விழுந்து படுத்து கிடந்தார். ஆனால் இப்போதைய மதுரை ஆதீனத்துக்கு எதிராக பேசுகிறார், அவர் வகிக்கும் அமைச்சர் பதவிக்கான மரியாதையை அவர் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். சேகர்பாபு வீண் வார்த்தைகள் தடித்தால், பாஜக களத்தில் இறங்கும், நீங்கள் ஏறி அடிக்க நினைத்தால் நாங்களும் ஏறி அடிக்க தயார். இவ்வாறு எச்.ராஜா பேசியுள்ளார்.
