சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ள பணத்திற்காக வட்டி விகிதத்தை குறைக்க ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு பரிந்துறைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.  பெரும்பாலான நடுத்தர மக்கள் எளிய முறையில் பணத்தை சேமிக்க கையில் உள்ள பணத்தை சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். காரணம் வங்கிகளைவிட அதில் சற்று கூடுதலாக வட்டி கிடைக்கும் என்பதால்தான்,  ஆனால்  அந்த வட்டிக்கும் பொருளாதார மந்த நிலையால் தற்போது ஆபத்து வந்து விட்டது.  

 

பொருளாதார மந்தநிலையில் இருந்து மீள முடியாமல்  அரசும்  ரிசர்வ் வங்கியும் தவித்து வருகின்றன.  இவ்விரு அமைப்புகளும் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் நிலைமை இன்னும் கட்டுக்குள் வரவில்லை .  அதனால் பல துறைகளும் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகின்றன. இதனால் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.   பல லட்சம் பேர் வேலை இழந்துவருகின்றனர்.  வங்கிகள் மற்று நிதி நிறுவனங்கள் பாதிக்கப்படுவதால் நிதி நிலையை சீராக்க அரசின் சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டியை குறைக்க மத்திய அரசிடம் ரிசர்வ் வங்கி பரிந்துரை செய்துள்ளது. 

வங்கிகளைவிட சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி அதிகமாக இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசு வங்கிகளுக்கு வாராக் கடன் சுமை பெரும் பிரச்னையாக உள்ளது.  இதைக் குறைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி எடுத்து வருகிறது.  வங்கிகள் குறைந்தவட்டியில் கடன் கொடுத்தால் நாட்டில் பணப்புழக்கம் அதிகரிக்கும். அதேவேளையில் நுகர்பொருள் விற்பனையும் அதிகரிக்கும்.  இதனை உறுதி செய்யவும் தனியார் நிதி நிறுவனங்கள் முதலீட்டுகளை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பதவி ஏற்றுள்ள சக்தி காந்த தாஸ் அனைத்து துறை நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து வருகிறார் .  பொருளாதார நிலையை சீர் செய்ய வங்கியாளர்கள் ,  என்பிஎப்சி நிபுணர்கள் பெரு நிறுவனங்களின் பிரதிநிதிகள் சங்க ஊழியர்கள் என்று அனைத்து தரப்பு சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். 

ரிசர்வ் வங்கியில் ஏற்பட்டுள்ள மேக்ரோ மற்றும் மைக்ரோ அளவிலான பொருளாதார  சவால்களை எதிர்கொள்ள வேண்டி உள்ளதால் இதனால் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்தால் அதன் பலன் பொதுமக்களுக்கு சென்று சேரும் வகையில் வங்கிகளும் வட்டி விகிதத்தை ரெப்போ வட்டி வீக்கத்துடன் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.