Asianet News TamilAsianet News Tamil

ஆண்டவன் என்னிடம் என்ன வேண்டும் எனக் கேட்டால்! இந்த 2 வரங்கள் கேட்பேன்! ராமதாஸ்.!

பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டதன் 35-ஆம் ஆண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழ்நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான இடங்களில் கொடியேற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

If the Lord asks me what I want! I will ask for these 2 blessings! Ramadoss
Author
First Published Jul 16, 2023, 1:56 PM IST

பாமக 35-ஆம் ஆண்டு துவக்க நாளையொட்டி தைலாபுரத்தில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கட்சி கொடியை ஏற்றி நிர்வாகிகளுக்கு இனிப்புகளை வழங்கினார். 

பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டதன் 35-ஆம் ஆண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழ்நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான இடங்களில் கொடியேற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதையும் படிங்க;- பொது சிவில் சட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது! தேச ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கும் எதிரானது! கைவிடுங்கள்!பாமக

If the Lord asks me what I want! I will ask for these 2 blessings! Ramadoss

தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் அலுவலகத்தில் கட்சிக் கொடியை பா.ம.க. நிறுவனர் மருத்துவர்  ராமதாஸ் ஏற்றி வைத்தார். தொடர்ந்து பாட்டாளி நிர்வாகிகளுக்கு இனிப்பு வழங்கினார். பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராமதாஸ்;- என்னுடைய பட்டாளி மக்கள் சொந்தங்களுக்கு அறிவுரை சொல்ல தேவையில்லை. எனென்றால் அவர்கள் மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லும் அளவிற்கு அவர்களுக்கு வேண்டிய பயிற்சிகளை கொடுத்துள்ளோம். 

இதையும் படிங்க;-  500 டாஸ்மாக் கடைகளை தொடர்ந்து மேலும் மூடப்படும் கடைகள்.. அமைச்சர் முத்துசாமி சொன்ன குட்நியூஸ்..!

If the Lord asks me what I want! I will ask for these 2 blessings! Ramadoss

ஆண்டவன் என்னிடம் என்ன வேண்டும் எனக் கேட்டால், இந்த 2 வரங்களை எனக்கு கொடுங்கள் என்று கேட்பேன். ஒன்று ஒரு சொட்டு மது இல்லாத தமிழகம். மற்றொன்று, ஒரு சொட்டு மழை நீர் கூட கடலில் போய் கலக்கக்கூடாது. இந்த இரண்டு வரங்கள் மட்டும் போதும் என்று சொல்லுவேன் என தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios